Monday, January 10, 2011

2011 கேப்டன் வருடம்?

     சேலம் மாநாட்டை கேப்டன் அறிவித்ததிலிருந்தே தே.மு.தி.க தொண்டர்கள் மட்டுமின்றி மற்ற கட்சியினரிடமும் எதிர்பார்ப்பு தொற்றி கொண்டது. விஜயகாந்த் கூட்டணி அமைப்பாரா இல்லை தனியாக நிற்பாரா?  அப்படியே கூட்டணி அமைத்தால் யாருடன் அமைப்பார்?  என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.  சிலர் இவரால் என்ன கூட்டம் கூட்டிவிட முடியும் ஆளும் கட்சியில் செலவு செய்து காசு கொடுத்துமே அவ்வளவாக கூட்டம் கூட்ட முடியவில்லை இவன் என்ன செய்வான்.  ஏதோ ஒன்று அல்லது இரண்டு லட்சம் பேர் வந்தாலே பரவாயில்லை என்று நினைத்தவர்கள் இன்று வாய்பிளந்து நிற்கிறார்கள்.  தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லை தொட்டிருக்கிறது சேலம் மாநாடு.  தே.மு.தே.க தொண்டர்கள் ஒன்றும் பணக்காரர்கள் அல்ல.  கஷ்டப்படும் மக்கள் அதிகம் உள்ள கட்சி அது.  இந்நிலையிலும் தனது சொந்த காசை போட்டு இப்படி ஒரு கூட்டத்தை வரலாறை ஏற்படுத்தி விட்டனர் தே.மு.தே.க கட்சி தொண்டர்கள்.  

        தே.மு.தி.க சேலம் மாநாட்டிற்கு கூடிய கூட்டமே கலைஞர் ஆட்சி எவ்வளவு நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி.  இன்றைய சூழ்நிலையில் ஆளும் கட்சியை எதிர்க்க இவரை விட்டால் சரியான தைரியமான ஆள் வேறு யாரும் இல்லை என மக்கள் புரிந்துகொண்டதை பார்க்க முடிந்தது.  மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்தின் எழுச்சி உரை அனைவரையும் கவர்ந்தது. கேப்டன் தைரியசாலியா இல்லை பிரேமலதாவா  என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அவருடைய பேச்சு அமைந்தது.  
     மொத்தத்தில் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி இடுவது உறுதியாகிவிட்டது.  வரும் தேர்தலில் தே.மு.தி.க உடன் கூட்டணி அமைக்காமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்பது திட்டவட்டமாகிவிட்டது.  ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பே இந்த மாநாட்டின் வெற்றி ரகசியம்.  மாநாட்டிற்கு தி.மு.க தவிர அனைத்து கட்சி காரர்களும் வந்திருப்பதை பார்க்கமுடிந்தது.  
      கூட்டம் கூட்டுபவநெல்லாம் ஜெயிக்கமுடியாது என்று பஞ்ச் பேசும் அருமை தமிழர்களுக்கு ஒன்று கூறிகொள்ளவேண்டும் "இது காசுக்கு கூடிய கூட்டம் அல்ல கேப்டனின் தலைமையை ஆதரிக்கும் கூட்டம்".  முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது.  
      இளைங்கர்களை வைத்து அவர்களை கவர்ந்துதான் கலைஞர் முதல் முறையாக ஜெயித்தார்  என்பது வரலாறு கூறும் உண்மை.  அந்த வரலாறு உண்மை என்றால் கேப்டனின் வெற்றியும் உறுதியான ஒன்று.  
     கலைஞரின் அராஜக ஆட்சிக்கு மக்கள் சாவு மணி அடிக்க தயாராகிவிட்டனர் என்பது சேலத்தில் உறுதியாகிவிட்டது.  இனி எவ்வளவு  காசு கொடுத்தாலும் சிலரின் பருப்பு வேகாது என்பது உண்மை.  
     சேலம் மாநாட்டை பார்த்து வாயை பிளந்து இன்னும் மூடாமல் திரியும் எதிர் கட்சி அரசியல் தலைவர்களே இனியாவது சுதாரித்து கொள்ளுங்கள் இல்லை எனில் திறந்த வாயில் அரிசி விழுந்துவிடும்.


     இந்த மாநாடு வெறும் ட்ரைலர் தான்.  வரும் தேர்தலில்தான் மெயின் பிச்சர் இருக்கிறது என்று கேப்டன் தொண்டர்கள் மார்தட்டிகொல்வதர்க்கு மேலும் அங்கு கூடிய கூட்டத்திற்கு இந்த வரலாற்று சுவட்டிர்க்கு முழுக்க முழுக்க கலைஞர் மட்டுமே காரணம்.  அதனால் அவருக்கு சத்தமாக ஒரு "ஓ" போடுவோம்.  வரும் தேர்தலில் சங்கு ஊதுவோம்.  

No comments:

Post a Comment