Saturday, January 22, 2011

என்ன செய்ய போகிறார் இளங்கோவன்?


     காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அமையாது என்று எண்ணி தனது வார்த்தை ஏவுகணையை கலைஞர் மீது அள்ளி வீசிய இளங்கோவனுக்கு இனி சோதனை காலம்தான்.  தி.மு.க காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் மேற்கொண்டு தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் இளங்கோவன்.
     தி.மு.க வுடன் கூட்டணி உருவாகிவிட கூடாது என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டவர் இளங்கோவன்.  கடந்த சில மாதங்களாக தி.மு.க வை கடுமையாக தாக்கி பேசி வந்தார்.  தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை காப்பாத்த  முடியாது என்று கூட சொன்னார்.  இப்போது கூட்டணி என்ற பெயரில் கலைஞரின் வெற்றிக்கு உதவும் சூழ்நிலையில் உள்ளார்.  இது இவருக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.  
     இன்னமும் மனம் தளராத இளங்கோவன் சோனியா காந்தியை சந்தித்து தனது மன குமுறலை வெளிபடுத்த நினைத்து அவரை சந்திக்க அனுமதி கேட்டுப்பார்த்தார்.  ஆனால் சோனியா இவரை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.  ஆனாலும் மனம்தளராத இளங்கோவன் டெல்லியிலேயே முகாம் இட்டு எப்படியும் சோனியாவை சந்திக்க நினைக்கிறார்.
     இனி சோனியாவை சந்தித்தாலும் எந்த மாற்றமும் நிகழபோவதில்லை.  தன்னை கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து வைகோ தனது அரசியல் வாழ்கையை அழித்துகொண்டார்.  அவ்வபோது கூட்டணி மாற்றம் செய்து ராமதாஸ் தனது அரசியல் வாழ்க்கையையும் தமிழக மக்கள் அவர் மேல் வைத்த நம்பிக்கையையும் கெடுத்து கொண்டுள்ளார்.  இந்த வரிசையில் இளங்கோவனும் சேர போகிறாரா இல்லை தனக்கு கௌரவம் தான் முக்கியம் என்று எண்ணி கட்சியை விட்டு விலகி வர போகிறாரா என்பது புரியாத புதிராக உள்ளது.  
     எது எப்படியோ இதுவரை, தி.மு.க வரும் தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட கூடாது.  அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று கூறிவிட்டு இப்போது தி.மு.க வெற்றிக்காக உழைத்தால் தமிழக மக்கள் அவர் முகத்தில் காரி துப்புவார்கள் என்பது அவருக்கும் தெரியும் தானே?  தனது கௌரவம் முக்கியமா இல்லை காங்கிரஸ் முக்கியமா என்பதை முடிவெடுக்கும் நிலையில் உள்ள இளங்கோவனின் அரசியல் நிலைமை சற்று பரிதாபமாகவே உள்ளது.  

1 comment:

  1. Pavam rommba kasu vankittaru.Vaikoo 20 kodi vankinaaram.Ivaru ethani kodiyooo.Pesamey arasiyalukku mulukku poda vendiyathu thaann.

    ReplyDelete