Sunday, January 16, 2011

ஜெ., - விஜயகாந்த் கூட்டணிக்கு ஆதரவு: சோ கருத்து



: "" தற்போதையை ஆட்சி மாறி, தமிழகத்துக்கு நல்லது நடக்க, ஜெயலலிதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைக்கலாம்,'' என்றும், துக்ளக் ஆசிரியர் சோ பேசினார்.

"துக்ளக்' வார இதழின் 41ம் ஆண்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் துக்ளக் ஆசிரியர் சோ பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியால்
மக்கள் பல வழிகளில் சங்கடத்தை சந்தித்து வருகின்றனர். தற்போதையை ஆட்சி மாறி, தமிழகத்துக்கு நல்லது நடக்க ஜெயலலிதாவை அனைவரும் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதாவை ஆதரிக்க சொல்கிறீர்கள், விஜயகாந்தை ஆதரிக்க சொல்லலாமே என்கிறார் இங்கு வந்திருக்கும் வாசகர் ஒருவர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., 35 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ள மக்கள் செல்வாக்குள்ள கட்சி. விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு 8 சதவீத ஓட்டு தான் கிடைத்தது. அதிக சதவீதம் ஓட்டு பெற்ற கட்சியால் தான் திடமாக தேர்தலை சந்திக்க முடியும்; ஆட்சி நடத்த முடியும். அதனால் தான் நான் ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என்று சொன்னேன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஜெயலலிதா அளவுக்கு தானும் உயர்ந்துவிட்டது போல விஜயகாந்த் நினைக்கிறார். இது தவறானது. தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு பல வகையில் தொந்தரவு கொடுக்கப்பட்டது. பல வழக்குகள் போடப்பட்டது. எல்லா வழக்கும் போய் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் உள்ளது. விஜயகாந்துக்கும் தி.மு.க., அரசால் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டது. அவரது, கோயம்பேடு கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டது. கல்லூரிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தப்பட்டது. வீட்டில் "ரெய்டு' நடத்தப்பட்டது. ஆளும் அரசால் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் பல வகைகளில் பிரச்னைகளை சந்தித்துள்ளனர்.இதனால் இருவரும், வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பேசலாம்.

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் "2 ஜி' அலைக்கற்றை அனுமதி அளித்ததில் 2001ம் ஆண்டின் படி ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். கருணாநிதியின் சொத்தையோ, ராஜாவின் சொத்தையோ, தி.மு.க., சொத்தையோ 2001ம் ஆண்டு விலைக்கு இப்போது கொடுப்பார்களா என சொல்லுங்கள்.தமிழகத்தின் பிரபல நடிகர்கள் என்னிடம் பேசும் போது, கருணாநிதி குடும்பத்தின் ஆதரவு இல்லை என்றால், சினிமாவை வெளியிட முடியாது, சினிமா இன்டஸ்ட்ரியே கருணாநிதி குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது, என்று புலம்பினர். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கருணாநிதி கவலைப்பட மாட்டார். பிரச்னையை மன்மோகன் சிங்கும், சோனியாவும் பார்த்துக் கொள்வார்கள், என்று இருப்பார். ஊழல் வெளிச்சத்துக்கு வந்தால் காங்., கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் சிக்குவார்கள், என்பது கருணாநிதிக்கு தெரியாதது இல்லை.முன்பு எமர்ஜென்சி நேரத்தில், நாட்டின் ஜனநாயக்தை காப்பாற்றுவதற்கு தேர்தல் நடந்தது. இப்போது, நாட்டையே காப்பாற்றுவதற்கு தேர்தல் நடக்கப் போகிறது. மத்தியில், காங்கிரசுக்கு இணையான கட்சி பா.ஜ.,. மட்டும் தான்.இவ்வாறு சோ பேசினார்.

விழாவில், எழுத்தாளர் குருமூர்த்தி, "ஸ்பெக்ட்ரம் ஊழல்' குறித்து பேசினார்.(dinamalar)

No comments:

Post a Comment