Monday, January 24, 2011

கூட்டணி ஏன்?

     விஜயகாந்த் ஆ.தி.மு.க வுடன் கூட்டணி சேர்கிறார் என்றதும் சிலர் கொதித்து இவனும் இப்படிதான்.  காசுக்காகத்தான் கூட்டணி சேர்கிறான்.  எல்லாம் நடிப்பு என்று பொரிந்து தள்ளுவது புரிகிறது.  ஆனால் அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.  
     விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த பிறகு ஜெயாவால் ஜெயிக்கமுடியவில்லை.  அவருடைய ஓட்டு வங்கி பிரிந்து விட்டது.  ஆனால் தி.மு.க வின் ஓட்டு வங்கி அப்படியே தான் உள்ளது.  ஆ.தி.மு.க வின் ஓட்டுகள் தான் பிரிந்து அதிகமாக விஜயகாந்துக்கு  விழுகிறது.  
     இந்நிலையில் எனக்கு தன்மானம்தான் முக்கியம் என்று கோரி தனியாக தேர்தலை  விஜயகாந்த் சந்தித்தால் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர அதுவே காரணம் ஆகிவிடும்.  தி.மு.க ஆட்சியில் தொடரும் விலையேற்றம், ஊழல், லஞ்சம் ஆகியவை தொடரவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.  
     இந்த தேர்தலில் தி.மு.க ஜெயித்துவிட்டால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது என்ற நிலையில் விஜயகாந்த் கூட்டணிக்கு வருவது மிகவும் நல்ல முடிவாகும்.  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது.  
     பலத்த பலம் பொருந்திய ஒரு எதிரியை வீழ்த்த பலர் ஒன்று சேர்வது கோழைத்தனம் ஆகாது.  அது சாணக்கியத்தனம்.  காசுக்காக கூட்டணி சேர்வது என்றால் சென்ற தேர்தலிலேயே சேர்ந்திருக்க முடியும்.  விஜயகாந்தின் எண்ணம் அப்படியல்ல.  தமிழக மக்களின் நன்மைகாகவே இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  
     மற்றபடி மேலும் விஜயகாந்தை விமர்சிப்பவர்கள் தமிழகத்தின் விஷமிகள் அல்லது தி.மு.க விசமிகலாகதான் இருக்க முடியும் என்பதை தமிழக மக்கள் உணரவேண்டும்.    
     தி.மு.க வின் பணபலத்தை எதிர்கொள்ள எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டிய நிர்பந்தம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.  இளங்கோவனை போல தி.மு.க வை கண்டபடி விமர்சித்துவிட்டு அந்த கூட்டணியில் விஜயகாந்த் சேரவில்லை.  தி.மு.க வை எதிர்க்கும் ஆ.தி.மு.க வுடன் தானே கூட்டணி சேர்கிறார்.  
     கூட்டணியே இன்னமும் முடிவாகவில்லை.  அதற்குள்ளாக தி.மு.க விஷமிகள் தனது வேலையை ஆரம்பித்துவிட்டனர்.  தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து தி.மு.க வை அதன் குடும்ப ஆட்சியை ஒழித்துகட்ட தயாராக வேண்டும்.  

1 comment:

  1. Athu sari whisky ai JJ oothi kodutha matter ennavaachu???

    ReplyDelete