Saturday, February 5, 2011

2ஜி அலைக்கற்றை ஊழல் - கலைஞர் டிவிக்கு பணம் போனதா?


2ஜி அலைக்கற்றை ஊழலில் கலைஞர்  டிவியும் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ராசாவின் கைதை தொடர்ந்து ஊழல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. வருகிற 10ந்தேதி
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ ஊழல் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவேண்டி இருப்பதால், சிபிஐ அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது அலைகற்றை ஊழலில் கிடைத்த பணம் கலைஞர் டிவிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையில் உள்ள டி பி ரியல்டி என்ற நிறுவனம், கலைஞர் டிவிக்கு சுமார் 214 கோடி ரூபாயை அனுப்பியுள்ளதாக அமலாக்க பிரிவு விசாரனையில் தெரிய வந்துள்ளது. இந்த டி பி ரியல்டி நிறுவனத்திற்கு சொந்தமான தொலை தொடர்பு நிறுவனத்திற்கு ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், தனக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றையை, துபாயை சேர்ந்த எடிசாலட் நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்று இலாபம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதாவும்,சுப்ரமண்ய சுவாமியும், 2ஜி அலைக்கற்றை ஊழலில் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்டர்பு இருப்பதாக கூறியிருப்பது குறிபிடத்தக்கது(inneram.com)

No comments:

Post a Comment