Wednesday, February 2, 2011

மவுனம் காத்த கருணாநிதி


 ராஜா கைது குறித்து, முதல்வர் கருணாநிதி, பத்திரிகையாளர்களிடம் பேசுவதை தவிர்த்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, டில்லியில் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், முதல்வர் கருணாநிதியின் கருத்தை பெறுவதற்காக, அவரது சி.ஐ.டி., காலனி வீட்டை பத்திரிகை நிருபர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர், பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்தார்.அடுத்ததாக, கோபாலபுரம் வீட்டுக்கு அவர் சென்ற போது, வீடு உள்ள தெருவில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதன்பின், தலைமைச் செயலகத்தில் நடந்த, இலவச கலர், "டிவி' டெண்டர் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்.பழைய தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், இரண்டு மணி நேரம் இருந்த முதல்வர், அங்கிருந்து புறப்படும் போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ராஜா கைது விவகாரத்தில் மவுனம் காக்கவே முதல்வர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தி.மு.க.,வின் பொதுக்குழு இன்று நடப்பதால், அதில் ராஜா விவகாரம் பற்றி பேசப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment