Wednesday, February 9, 2011

ராமதாஸ் உச்சகட்ட காமெடி!

       சினிமாவில் வடிவேல் காமடி எவ்வளவு பெரிதோ அதுபோல அரசியலில் நம்ம ராமதாஸ் காமடி பயங்கரமாக இருக்கும்.  வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் நீங்களும் வாய் விட்டு சிரிக்க நேற்று ராமதாஸ் அளித்த பேட்டியை கீழே பதிவிடுகிறேன் படித்து சிரியுங்கள்.  
          "இளைஞர்களை மையமாக வைத்து தேர்தல் வியூகம் அமைத்துள்ளோம். சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக, இளைஞர்கள் மாற வேண்டும். சினிமாக்காரர்கள் பின்னால் சென்று சீரழியாதீர்கள்; கொள்கைப்பிடிப்புடன் வாழ உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து தீவிரமாக பணியாற்றுங்கள். கூட்டணி இன்னும் முடிவாகாததால், அது பற்றி இப்போதைக்கு ஏதும் பேச முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் பணியாற்ற தயாராக இருங்கள். தொப்புளில் பம்பரம் விடும் நடிகரின் கட்சி வரும் தேர்தலில் புறக்கணிக்கப்பட வேண்டும். இரண்டு திரைப்படம் நடித்தவர்கள் கூட முதல்வராக ஆசைப்படுகிறார்கள். சினிமாக்காரர்களின் கையில் தமிழகம் சிக்கினால் என்னவாகும் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நடிகர்கள் தங்களை தெய்வங்களாக எண்ணி கொள்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் எழுச்சி வர வேண்டும். ஆந்திராவில் முதல்வர் கனவோடு கட்சி தொடங்கிய சிரஞ்சீவி போனியாகாமல் கட்சியை ஊற்றி மூடிவிட்டார். இந்த நிலைமை தமிழகத்தில் உள்ள சில கட்சிகளுக்கும் உருவாகும். பா.ம.க.,வை விட நல்ல கொள்கைகள் உள்ள கட்சி தமிழகத்தில் இருப்பது நிருபிக்கப்பட்டால், அந்த கட்சியில் நான் சேர்ந்துவிடுகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்"
     நன்றாக சிரிதீர்களா? வர வர கொள்கையை பற்றியெல்லாம் யார் யார் பேசுவது  என்றே தெரியாமல் போய் விட்டது.  இன்னும் எந்த கட்சி நம்மை சேர்த்துகொள்ளும் என்று காத்திருக்கும் ராமதாசுக்கு இது ஓவராக தெரியவில்லை!  போங்க பாஸ் யாராவது பெரியவங்க இருந்த வந்து பேச  சொல்லுங்க.  ஏற்கனவே விஜயகாந்துடன் மோதித்தான் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக அவரை அரசியலுக்கு இழுத்துவந்து நீங்கள் அழிந்துகொண்டு இருக்கிறீர்கள்.  பத்தாது என்று இன்னமும் எதிர்பார்கிறீர்கள் போல இருக்கிறதே.  கவலை படாதீர்கள் வரும் தேர்தலில் உங்களுக்கு உண்மை புரியும்.  அப்புறம் இன்னும் ஒரு சந்தேகம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜயகாந்துடன் கூட்டணி வைத்துகொள்வதில் எனக்கு சம்மதம் என்று யாரோ சொன்ன மாதிரி ஜாபகம் அது யாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாஸ்.

3 comments:

  1. ப்புறம் இன்னும் ஒரு சந்தேகம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜயகாந்துடன் கூட்டணி வைத்துகொள்வதில் எனக்கு சம்மதம் என்று யாரோ சொன்ன மாதிரி ஜாபகம் அது யாருன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க பாஸ்.


    ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. romba ariva eluthi irukiratha ninapa unaku yen ippadi....
    aama nan onnu kekuren ramadoss mattum than kuttani marurara d.m.k and a.d.m.k kuda than maruthu ...

    ippo irukira rendu thirudan kitta irunthum konjam nall uyiroda irukanum na ippadi iruntha mattum than mudium illa na vai.ko nilamai than ....

    enna nalla yosichu neeya eluthu athavittutu engayathu padichitu vanthu kupaya kottatha sariya

    ReplyDelete
  3. http://maransite.blogspot.com/2011/02/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+blogspot/fsdi+(%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D)

    ReplyDelete