Showing posts with label Political News. Show all posts
Showing posts with label Political News. Show all posts

Monday, September 3, 2012

கூகுள் பிளஸையே திணறடித்த மோடி


சமூக வலைதளமான டிவிட்டரில் 9 லட்சம் பார்வையாளர்களை வைத்துக் கொண்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் குஜராத் முதல்வர் மோடி இணையதளம் மூலம் நேரடியாக உரையாடியதன் மூலம் மற்றொரு சாதனையை புரிந்திருக்கிறார்.
கூகுள் பிளஸ் இணையதளம் மூலமாக நேற்று இரவு மோடி தமது உரையாடலை நடத்தினார். இதில் அரசியலுக்கு தடை விதிக்கபப்ட்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் பற்றிய இந்த உரையாடல் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக மோடியின் யூ டியூப், ஃபேஸ்புக், டிவிட்டர், மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றின் மூலம் சுமார் 5 ஆயிரம் கேள்விகள் பெறப்பட்டன.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றிய கேள்விகளே அதிகம் கேட்கப்பட்டிருக்கின்றன. மோடியும் சளைக்காமல் பதில் கூறியிருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அரசியல் மோசமனது என்று நினைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். மதச்ச்சார்பின்மை என்பது வாக்கு அரசியலுக்காக திரிக்கப்பட்டு சொல்லப்பட்டு வருகிறது என்றும் மோடி கருத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதோடு மட்டும் நின்றுவிடவில்லை!
இந்த உரையாடலில் பங்கேற்க ஒரே நேரத்தில் பல இணையதள வாசகர்கள் முயன்றதால், கூகுள் இணையதளமே முடங்கிப் போகும் நிலைமையும் உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு வாசகர்கள் கூட்டல் அலைமோதியது!

Saturday, August 18, 2012

அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு?


 தமிழகத்தில், தி.மு.க.,விற்கே அதிகப்படியான சொத்துகள் உள்ளன. அதிகப்படியான வருவாய் உடைய கட்சியாகவும், அக்கட்சியே திகழ்கிறது. இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க., உள்ளது.

தமிழகத்தில், 1967ம் ஆண்டு முதல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என, இரண்டு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அதேநேரத்தில், இக்கட்சிகளின் வருவாயும், மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும், அ.தி.மு.க.,வுடன் ஒப்பிடுகையில், தி.மு.க.,விற்கே, அதிகப்படியான வருவாய் கிடைத்துள்ளது. அதிகப்படியான சொத்துகளைக் கொண்ட கட்சியாகவும், தி.மு.க., திகழ்கிறது. இருந்தாலும், அ.தி.மு.க.,வும், தன் வருவாய் மற்றும் சொத்துகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது. இந்த இரு கட்சிகளின், வருமான வரி கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கையின் அடிப்படையில், இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு: 2008-09ம் ஆண்டில், தி.மு.க.,வின் மொத்த ஆண்டு வருமானம், 16.81 கோடி ரூபாய். அதுவே, 2007-08ல், 2.66 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது ஒரு ஆண்டில், இந்தக்கட்சியின் வருவாய் 531 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் கூறுகையில், ""2007-08 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் வருவாய் அதிகரித்ததற்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் நிதி வசூலித்ததே காரணம்,'' என்றார். தமிழகத்தில், 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்றதன் மூலம், அ.தி.மு.க., ஆட்சி ஏற்பட்டது. இதனால், 2011-12ம் நிதியாண்டில், அக்கட்சியின் வருவாய், 12.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமிருந்து, வேட்பு மனு கட்டணமாக வசூலித்த தொகையால், வருமானம் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த, 2010 -11ம் ஆண்டில், அ.தி.மு.க.,வின் வருவாய், 9.74 கோடி ரூபாய். வருவாய் கணக்கு சமர்ப்பித்துள்ள, இந்தக் கட்சிகள், கட்சிகளுக்கு நிதி வழங்கிய நபர்கள், அவர்கள் வழங்கிய தொகை போன்ற விவரங்களையும் சமர்ப்பித்துள்ளன. மேலும், சொத்துகளைப் பொறுத்தமட்டில், அ.தி.மு.க.,வை விட, அதிக சொத்துகளை கொண்ட கட்சியாக, தி.மு.க., உள்ளது. 2006-07ம் ஆண்டு முதல், 2011-12ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு, 289.85 கோடி ரூபாய். இதே காலகட்டத்தில், அ.தி.மு.க.,வின் மொத்த சொத்து மதிப்பு 258.45 கோடி ரூபாய். அதேநேரத்தில், 2007-08 ம் ஆண்டில், 40.26 கோடி ரூபாயாக இருந்த அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு, 2009-10ம் ஆண்டில், 35.97 கோடி ரூபாயாக குறைந்தது. தற்போது அ.தி.மு.க., 55.83 கோடி ரூபாய் சொத்துகளைக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, மற்றொரு திராவிடக் கட்சியான வைகோவின் ம.தி.மு.க., இந்த இரண்டு கட்சிகளை ஒப்பிடுகையில், குறைந்த வருவாய் கொண்டதாக உள்ளது. 2009-10ம் ஆண்டில், இக்கட்சிக்கு கிடைத்த வருவாய் 5.58 கோடி ரூபாய். ஆனால், 2008- 09ம் ஆண்டில் 70 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. விஜயகாந்தின் தே.மு.தி.க., 2011-12ம் ஆண்டில் மட்டுமே, வருவாய் விவரங்களை சமர்ப்பித்துள்ளது. அதில், 79 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இக்கட்சியின் மொத்த சொத்து மதிப்பு, 4.44 கோடி ரூபாய். ஆனாலும், சொத்துகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. அதுபோல், ம.தி.மு.க.,- பா.ம.க.,வின் சொத்துகள் பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

கலைஞர்கருணாநிதி.காம்


 திமுக தலைவர் கருணாநிதி தனது முதுபெரும் வயதில் இணையதளத்திற்குள் முறைப்படி காலெடி எடுத்து வைத்துள்ளார்.கலைஞர்கருணாநிதி. காம் என்ற பெயரிலான அவரது புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
சமீபத்தில்தான் கருணாநிதி டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றுக்குள் புகுந்தார். இப்போது இணையதள வீட்டுக்குள்ளும் புதுமுனை புகுவிழா நடத்தி அடியெடுத்து வைத்துள்ளார்.
http://www.kalaignarkarunanidhi.com என்ற பெயரிலான இந்த புதிய இணையதளம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. கருணாநிதியை அதைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இனி இந்த இணையதளத்திலும், திமுக நிகழ்ச்சிகளை அனைவரும் அறிந்து கொள்ளலாம். டுவிட்டர், பேஸ்புக்கில் சேர்ந்ததன் மூலம் இளைய தலைமுறையினருடன் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் தனக்கே உரிய மந்தகாச புன்னகையுடன்.
இந்த இணையதளம் தற்போது தொடங்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. அதுதொடர்பான பணிகள் நடந்து வருவதாக அதில் செய்தி போடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பேஸ்புக் கணக்கு உண்மை என்ன?


 திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் கணக்கு ஒரே நாளில் முடங்கிவிட்டதாக வதந்திகள் பரவியுள்ள நிலையில், அந்தக் கணக்கு 7,500 ஃபாலோயர்ஸுடன் நன்றாகவே இயங்கி வருகிறது.
சமூக வலைத் தளங்களில் திமுக குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம் பெற்று வருகின்றன.
ஆரம்பத்தில் அசட்டையாக இருந்த திமுக, இப்போது சமூக வலைத் தளங்களில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
பல ஆயிரம் திமுகவினர் தங்கள் சொந்தப் பெயர்களில், மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகங்களின் பெயர்களில் பேஸ்புக் கணக்கைஆரம்பித்து, திமுக எதிர்ப்பாளர்களை வெளுத்துக் கட்ட ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதிட்விட்டர், பேஸ்புக், யுட்யூப் போன்றவற்றில் கணக்கு தொடங்கி, திமுக மற்றும் தான் சம்பந்தப்பட்ட விஷயங்களை எழுத ஆரம்பித்தார். அவரது அறிக்கைகளும் இவற்றில் இடம்பெற்றன. நேற்று முரசொலி மாறன் பிறந்த நாளில் தனக்கான தனி இணையதளத்தையும் கருணாநிதி தொடங்கினார்.
இதற்கிடையே, கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் தொடங்கிய ஒரே நாளில் முடங்கிவிட்டதாக ஒரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர். பேஸ்புக்கில் உள்ளவர்களின் எதிர்ப்பு மற்றும் கமெண்ட்களுக்கு பயந்து கணக்கை முடக்கி விட்டதாக செய்தியும் வெளியிட்டுள்ளனர்.
கோயிங் ஸ்டெடி....
ஆனால் உண்மையில் 7500 ஃபாலோயர்ஸுடன் அவரது பக்கம் லைவாகவே உள்ளது.http://www.facebook.com/Kalaignar89 எனும் அந்த பக்கத்தில், நேற்று முரசொலி மாறன் பிறந்த தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செய்த படம் மற்றும் செய்தியையும் கருணாநிதி பதிவேற்றியுள்ளார்.

Thursday, August 16, 2012

கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு?


தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர். துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன. நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில் அவருடைய நிலைப்பாடு, குடும்ப அரசியல் என கருணாநிதி குறித்து கடுமையான எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில், கருணாநிதியை தனிப்பட்ட முறையில் தாக்கி மிக கடுமையான பதிவுகள் பதியப்பட்டன. இந்த பதிவுகளுக்கு, இந்த பக்கத்தில் இணைந்து இருந்த, பல தி.மு.க.,வினரும் பதிலடி தந்தபடி இருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் கருணாநிதியை பற்றி கடுமையான விமர்சனங்கள் அதிகமாயின. இதனால், கருணாநிதியை தனிப்பட்ட முறையில், விமர்சனங்களை பதிவிட்ட பலர், மாலையில் தடை செய்யப்பட்டனர். பின்னர், மாலை 6 மணியில் இருந்து புதிதாக துவங்கப்பட்ட கருணாநிதியின் "பேஸ் புக்' காணாமல் போனது.

Monday, July 23, 2012

பிரணாப் முகர்ஜியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா...?


 நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக உருவெடுத்துள்ள பிரணாப் முகர்ஜிக்கு ஏகப்பட்ட சலுகைகள் காததிருக்கின்றன. அவருக்கு இனி மாதந்தோறும் ரூ. 1.50 லட்சம் சம்பளமாக கிடைக்கும்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை என்ற பெருமை படைத்தது ராஷ்டிபதி பவன். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மாளிகைதான் இனி பிரணாப் முகர்ஜியின் வீடு. சாதாரண கிராமத்திலிருந்து தனது புத்திசாலித்தனம், உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் இந்த நிலைக்கு உயர்ந்து சாதனை படைத்துள்ளார் பிரணாப் முகர்ஜி.
பிரணாப் முகர்ஜி முதல் முறையாக எம்.பி. ஆனபோது அவரைப் பார்க்க ஊரிலிருந்து

Sunday, July 22, 2012

பிரணாப் முகர்ஜி - முழு வாழ்க்கை வரலாறு


புதிய ஜனாதிபதியாகும் பிரணாப்முகர்ஜி கிராமத்தில் பிறந்து ஆசிரியர் ,சமூகசேவகர், 5 முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்து இந்திரா காலத்தில் அமைச்சராக இருந்து பல்வேறு அனுபவங்களை பெற்று இன்று ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்திருக்கிறார். அவரது முழு வாழ்க்கை வரலாறு விவரம் :
பிரணாப் முகர்ஜி 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை,

Monday, March 26, 2012

வரி அதிகரிப்பு புரியாத புதிர் : விஜயகாந்த்


""பட்ஜெட் அறிக்கை தாக்கல் என்பது ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம் ஆகிவிட்டதே தவிர, மக்கள் சொந்த காலில், நிற்கும் அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை'' என பட்ஜெட் குறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:மாநிலத்திற்கு கிடைக்கும் வருவாயை விட செலவு குறையும் என்றும்,

Monday, February 20, 2012

தே.மு.தி.க.வேட்பாளர் அறிவிப்பு

 சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கே.முத்துக்குமார் போட்டியிட உள்ளதாக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில், தே.மு.தி.க.போட்டியிடுமா என்ற கேள்விக்கு, வேட்பாளர் அறிவிப்பின் மூலம், தே.மு.தி.க தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Saturday, February 11, 2012

விஜயகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது: என்.டி.ஆர். மனைவி

வரும் 2014ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சமாதிகட்டுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவதென்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். 

என்.டி. ராமராவ், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் ஆந்திர மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அப்பேர்பட்ட ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவின் மூலம் ஆட்சியைப்

Thursday, February 9, 2012

என்று தணியும் தமிழகத்தின் மின்சார தாகம்: விஜயகாந்த் கேள்வி


 ''தொடர் மின்வெட்டால் என்று தணியும் இந்த மின்சார தாகம் என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. இதை உணர்ந்து மக்களுக்கு பரிகாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: இந்தியாவிலேயே தமிழகத்தை முதலிடத்திற்கு

Sunday, December 18, 2011

ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்புவோம்

 லோக்பால் சட்டத்துக்கு தெளிவான முடிவு இல்லையென்றால்,  ஜனவரி 1ம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவுக்கு வலு சேர்க்கும் வகையில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் அன்னா ஹசாரே நேற்று சென்னை வந்தார். பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில்

Tuesday, December 6, 2011

கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை நீக்குவேன்: கனிமொழி நம்பிக்கை


 ""2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை கோர்ட்டில் சரியான முறையில் எதிர்கொண்டு, எனக்கும், கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்குவேன்,'' என, தி.மு.க., ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி கூறினார்.
ஆறு மாத சிறைவாசத்துக்குப் பின், ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர், நேற்று

Sunday, December 4, 2011

நான் செத்தால் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துபோனதாய் சொல்வார்கள்! - ஹஸாரே

 ஊழலுக்கு எதிராக இப்போது நான் மேற்கொள்ளும் போராட்டத்தில் நான் இறந்தால் அரசாங்கம்தான் அதற்குப் பொறுப்பு. அப்படியே நான் செத்துப்போனாலும் மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துபோனதாய் மக்கள் சொல்வார்கள்," என்றார் அன்னா ஹஸாரே.

பாராளுமன்றத்தின் தற்போதைய குளிர் காலக் கூட்டத் தொடரில் வலுவான லோக்பால் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால்

Thursday, December 1, 2011

ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு? விஜயகாந்த் ஆவேசம்


:""தமிழ்நாடே ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் இப்போதைய நிலை என்ன ஆச்சு?'' என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பினார்.
ரிஷிவந்தியம் தொகுதியில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ., விஜயகாந்த் நேற்று கலந்து கொண்டார். சாலை மேம்பாடு, பஸ் வசதி, சுகாதாரம், குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள், விவசாய அபிவிருத்தி குறித்தும் அவற்றை

Tuesday, November 29, 2011

என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?

 மக்கள்நல பணியாளர்களை டிஸ்மிஸ் செய்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 13500 பேரை தமிழக அரசு சமீபத்தில் அதிரடியாக  டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்

Monday, November 28, 2011

கனிமொழி, 4 பேருக்கு ஜாமீன்

 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 5 பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
 கனிமொழி தவிர, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகாவ்ன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவன இயக்குநர்கள் ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.
 எனினும் நடைமுறைத் தாமதத்தால் மேலும் ஒருநாள் அவர்கள்

Monday, November 21, 2011

குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்


:""தமிழகத்தில் குடும்ப ஆட்சி போய் இப்போது கும்பல் ஆட்சி நடக்கிறது. பால் விலை, பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பேன்,'' என, தே.மு.தி.க., நிறுவனரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆவேசமுற்றார்.

மதுரையில் நேற்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவை நடத்தி விஜயகாந்த் பேசியதாவது :பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இதை சொல்லியா ஓட்டு கேட்டீர்கள். மத்திய அரசு பாகுபாடின்றி

Sunday, October 23, 2011

கேப்டனின் சுய விவரம்

Vijayaraj Azhagarswami Naidu, professionally known by his stage name Vijayakanth, is a Tamil film actor and politician in Tamil Nadu, India. He is the founder of the Desiya Murpokku Dravida Kazhagam and a Member of Legislative Assembly representing Virudhachalam, Tamil Nadu, India.
Early life
VijayakanthVijayakanth was born as Vijayaraj raja on 25 August 1952 in Madurai, Tamil Nadu. His family deity is Veera Chinnamma at Kangeyanatham. His parents are K. N. Alagarswami and Aandal Azhagarswami. His father had a rice mill and was a popular man in the region. Alagarswami was Madurai's Counsellor for two terms. Vijayakanth had a stepmom by the name Rukmaniammal and she had 7 children and on the whole, alagarswami had 11 children He married Premalatha on 31 January 1990 and had two sons named Vijay Prabhakar and Shanmuga Pandian. Upon entering the film industry to pursue an acting career, Director Khaja (who directed his first film) changed his name to " Amirtaraj" and then "Vijayakanth", dropping the "raj" out of his name and suffixing "kanth." He is nicknamed "Captain" which was taken from his film Captain Prabhakharan.
Education
Vijayakanth first studied in Rosary Convent in Madurai and later continued his education in M C School in Madurai. He later switched over to Devakottai T. Britto High School where he was an inmate. Vijayakanth's confidant till date, Ibrahim Ravuthar was his school friend.
Acting career
Vijayakanth has starred

Wednesday, October 19, 2011

திமுகவின் 'திருமங்கலம் பார்முலா' இப்போது அதிமுகவிடம்

'திருமங்கலம் பார்முலாவை' இப்போது அதிமுக எடுத்துக் கொண்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கை செலுத்திவிட்டு நிருபர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் ஆணையம், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் கைப்பாவையாக,