வரும் தேர்தலில் தோற்றுவிட்டால் அரசியலில் தனது கட்சியின் எதிர்காலம் நன்றாக இருக்காது என்று கருதும் கருணாநிதி, வெற்றிக்காக எதையும் செய்ய துணிவார். சென்ற தேர்தலில் இலவச வண்ண தொலைகாச்சி பெட்டி தருவதாக கூறி ஜெயித்தார். இன்று விலைவாசி என்னவென்று உங்களுக்கே தெரியும். வரும் தேர்தலில் வண்ண கைபேசி வழங்க இருப்பதாக செய்திகள் கசிகிறது. இப்போதைய விலைவாசியையே நம்மால் தாங்கமுடியவில்லை பிறகு மீண்டும? இம்முறையும் ஏமாந்துவிடாதீர்கள் தமிழர்களே! இந்த ஆட்சியில் எதிர் கட்சிகள், ஆளும் கட்சிகள், பொதுமக்கள் ஏன் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கலவரமாக காட்சி அளிக்கிறது தமிழகம்.
எதிர் கட்சிகள் அடக்குமுறைகளுக்கு ஆளாக்கபடுகின்றன. அவர்களது சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை கூட ஆளும் கட்சியினர்தான் முடிவெடுக்கின்றனர். அரசியல் உலகத்தை சீரழித்தது பத்தாதென்று சினிமா உலகத்தையும் அடக்குமுறையால் கைபத்தி வைத்துள்ளனர் கலைஞரின் பேரன்கள்.
அரசாங்க அலுவகமேல்லாம் ஊழல் அலுவலகங்களாக மாறிவிட்டன. இந்த ஆட்சியில் யாருமே நிம்மதியாக இல்லை. மக்களை வாழவைப்பதற்கு பதிலாக சுரண்டும் அரசாக மாறிவிட்டது கலைஞரின் அரசு. ஊழலின் ராஜாவாக திகழ்கிறார் அமைச்சர் ராஜா. பல ஆயுரம் கோடிகள் கொள்ளையடித்து கொடுத்திருக்கிறார் இவர் தனது ஊழல் ராஜா கலைங்கருக்கு. அந்த பணத்தையெல்லாம் மக்களுக்கு அள்ளிவீசி எப்படியும் இந்த முறை ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த முறை வட்டியும் முதலுமாக சம்பாதித்துகொள்ளலாம் என்று அரசியலில் வியாபார கணக்கு போடுகிறார் கலைஞர். மக்களாட்சி என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடத்திகொண்டிருக்கும் கலைஞரை நம்பினால் தமிழர்கள் நடுதெருவுக்கு வருவது நிச்சயம். முடிவு உங்கள் கையில்!
No comments:
Post a Comment