இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் பற்றி அவருடைய மனைவி அஞ்சலி பேட்டி அளித்தார்.
"பல ஆண்டுகள் கிரிக்கெட் விளயாடிவந்தாலும் அவருக்கு இப்போதும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் பதட்டம் ஏற்படுவது உண்டு. அன்று முழுவதும் சரியாக சாப்பிட மாட்டார். வழக்கத்துக்கு முன்பே எழுந்துவிடுவார். அவர் விளையாட்டில் காட்டும் அக்கறையே அவருடைய புகழுக்கு காரணம் என்று நினைக்கிறேன். அவர் பதட்டம் அடையும்போதெல்லாம் நான் அவரை சமாதானம் செய்யமாட்டேன். அது அவருடைய பழக்கமாக மாறிவிட்டது. தெண்டுல்கர் பேட் செய்ய தொடங்கியவுடன் அந்த பதட்டம் என்னையும் தொற்றிகொள்ளும். செல் போனை ஆப் செய்துவிட்டு டெலிவிசன் முன்பு அமர்ந்து பார்ப்பேன். உணவு மற்றும் தண்ணீர் குடிக்க குட அந்த இடத்தை விட்டு எளுந்திரிக்கமாட்டேன். தெண்டுல்கர் ஒரு உணவு பிரியர் ஆனால் அவருடைய வீட்டு சமையல்காரர் மாதிரியோ அவருடைய அம்மா மாதிரியோ எனக்கு சிறப்பாக சமைக்க தெரியாது". இவ்வாறு அஞ்சலி கூறினார்.
No comments:
Post a Comment