அழகானவர்களை விட்டு வைக்குமா தமிழ் சினிமா? 2010ல், வீரசேகரன் படத்தில் தமிழில் அறிமுகமானார். அடுத்து, சர்சை இயக்குனர் சாமியின் "சிந்துசமவெளியில் நடித்து, சர்சையில் சிக்கினார். "இனி அமலா அவுட்... என, கோலிவுட் எதிரொலித்த போது, அதே ஆண்டில் பறந்து வந்த "மைனா, அமலா பாலை "அலேக்காய்" தூக்கிச்சென்றது. அடுத்து, அதிவேகமாய் துவங்கியது, அமலாவின் இன்னிங்ஸ்.
"தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள்,என, இளைஞர்களை கிறங்கடிக்கும் பல அவதாரங்களை எடுத்தார். "உன் பூப்போட்ட பாவாடை போதும் எனக்கு; அதில் வெள்ளி விழா படம் காட்ட ஆசை எனக்கு, என, அனைவரையும் உளற வைத்த அமலாவின் அசத்தல் முடிந்தபாடில்லை. "ஆகாஷிண்டே நிறம் என்ற மலையாளப் படத்தில் பிஸியாய் இருப்பதால், தமிழ் இயக்குனர்கள் தவிக்கிறார்கள்.
பேச நேரம் இல்லாமல் தவிக்கும் அமலாவை, "பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட போது, ""மொத்தம் 13 படம் நடிச்சிருக்கேன். அதில் எட்டு, தமிழ் படம். என்னை தாங்கிப்பிடித்த தமிழ் சினிமாவை மறக்க முடியாது. தமிழில் கிடைத்த வரவேற்பு, தெலுங்கில் பெஜவாடா, லவ் பெய்லியர் வாய்ப்பைத் தந்தது. "ஆகாஷிண்டே நிறம் முடிந்ததும்; அங்கே (தமிழ்) தான் வருவேன், என, அழகாய் "டைப் செய்திருந்தார். "அடடா...கண்ணுக்கு குளிர்ச்சி தர எப்போது வருவார் அமலா என காத்திருக்கும் ரசிகர்களுக்கு, நம் வழியாக அமலா பால் அனுப்பிய மெஜேச் ஆறுதல் தரட்டும்!
source:http://cinema.dinamalar.com/tamil-news/8181/cinema/Kollywood/interview-with-amalapaul.htm
No comments:
Post a Comment