என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்' திரைப்படப் பிரச்சினைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கமல் எனது 40 ஆண்டுகால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத் திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததிலிருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும், மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மேலும் கமலஹாசன் இந்த படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஒரு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுசா தடை செய்ய வேண்டும் என்ற கருத்திலிருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்து பேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாதுநபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Read more at:
Read more at:
No comments:
Post a Comment