பதில்: தேர்தல் வரபோகிறது என்று அர்த்தம்.
கேள்வி: மதுரையில் ஜே ஆர்ப்பாட்டத்தின்போது மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது என்று கூறபடுகிறதே?
பதில்: புத்திசாலித்தனம் என்ற பெயரில் கலைஞரின் சின்னபுள்ளை தனம்.
கேள்வி: நான் ஆட்சிக்கு வந்தால் மதுரையின் தீய சக்தியை ஒழித்துகாட்டுவேன் என்கிறாரே ஜே?
பதில்: அந்த தீய சக்தி மதுரையை ஒழித்துகட்டாமல் இருந்தாலே போதும்.
கேள்வி: தற்பொழுது கலைஞர் நல்ல திடகாத்திரமாக இருப்பதுபோல் உள்ளதே?
பதில்: அனைய போகின்ற விளக்கு நல்ல பிரகாசமாக எறியும் என்பது தெரியாதா?
கேள்வி: அழகிரி பார்லிமென்ட்டில் ஆங்கிலத்தில் பேசுவாரா?
பதில்: பார்லிமென்ட் என்கிற ஆங்கில வார்த்தையை பேசினாலே போதும்.
கேள்வி: ஜே இப்போதெல்லாம் m .g .r பெயரை அடிக்கடி உபயோக்கிறாரே?
பதில்: அந்த பெயரின் மகிமையை இப்பொழுதாவது புரிந்துகொண்டாரே.
கேள்வி: எந்திரன்?
பதில்: பாராட்டப்படவேண்டிய முயற்சி.
கேள்வி: விஜய் அரசியலுக்கு வருவேன் என்றார் இப்போது சத்தத்தையே காணோமே?
பதில்: ஒரேஅடியாக முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடலாம் என்று நினைத்திருக்கலாம்
கேள்வி: காங்கிரசில் கோஷ்டி பூசல் எப்போது தீரும்?
பதில்: கலைஞர் எப்போது நடிப்பதை விடுவார்?
கேள்வி: ரஜினி அடிக்கடி இமயமலை சென்றுவருகிறாரே?
பதில்: தன புகழ் பாடும் அல்லகைகளிடமிருந்து கொஞ்சநாலாவது தப்பிக்கலாம் என்று இருக்குமோ?
No comments:
Post a Comment