என் பழைய மனைவி லலிதகுமாரியும் புது மனைவி போனி வர்மாவும் இப்போது நல்ல நண்பர்களாகிவிட்டார்கள் என்று கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதகுமாரியை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜ், மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட பிறகு (ஒரு குழந்தை இறந்துவிட்டது), பாலிவுட் நடன இயக்குநர் போனி வர்மாவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.
சமீபத்தில் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். லலிதகுமாரிக்கும் அவருக்கும் பிறந்த பெண் குழந்தைகள் இருவரும் இப்போது பிரகாஷ்ராஜுடன் வசிக்கின்றனர்.
போனி வர்மாவுடனான புதிய வாழ்க்கை எப்படி உள்ளதென சமீபத்தில் ட்விட்டரில் பிரகாஷ்ராஜ் இப்படி எழுதியுள்ளார்:
"புதிதாக திருமணம் ஆனவர்கள் கணவனுக்காக விரதமிருப்பது வடக்கில் பிரபலம் (தில்வாலே துல்ஹனியே லேஜாயேங்கேவில் கஜோல் விரதமிருப்பதைப் போல). என் மனைவி போனியும், எனக்காக தனது ஷூட்டிங்குக்குக் கூடப் போகாமல் நாள் முழுக்க விரதமிருந்தார். இந்த திருமண உறவு மிகவும் பிடித்திருக்கிறது. வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது... அழகாக உள்ளது" என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
தனது பழைய மனைவி லலிதகுமாரி பற்றி கூறுகையில், " எனது குழந்தைகள் இருவரும் என்னுடன்தான் உள்ளனர். என் முன்னாள் மனைவி லலிதகுமாரியும், இப்போதைய மனைவி போனியும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர்" என்று எழுதியுள்ளார் பிரகாஷ் ராஜ்
No comments:
Post a Comment