Friday, December 3, 2010
தெரிந்துகொள்வோம்-3 (கருணாநிதி-3 )
மனைவி பத்மாவின் மரணம் கருணாநிதியை பெரிதும் பாதித்தது. உறவினர்கள் அவரை தேற்றி, குழந்தையாக இருக்கும் முத்துவை கவனித்து கொள்வதற்காகவாவது மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என வர்ப்புருதினார்கள்.
முடிவில் 1948 தாயாளு அம்மாளை கருணாநிதி மணந்துகொண்டார். திருமாகாளம் என்ற ஊரை சேர்ந்த கோவிந்தசாமியின் மகள் தாயாளு.
தி.மு.கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் முன்னேறிய கருணாநிதி மாடர்ன் தேயாட்டேர் தயாரித்த மந்திரி குமாரி படத்துக்கு வசனம் எழுதி புகழ் பெற்றார்.
1952 இல் பராசக்தி படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தை தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.
1953 இல் தி.மு.கழகம் மும்முனை போர்ராட்டம் நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரை கல்லக்குடி என்று மாற்ற கோரி நடந்த போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார் கருணாநிதி. அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1954 இல் வெளியான மனோகரா படத்தில் இடம் பெற்ற கருணாநிதியின் வசனங்கள் அவர் புகழை இமயத்திற்கு கொண்டு சென்றன.
(தொடரும்....)
Labels:
Political News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment