Saturday, October 16, 2010

கடவுள் ஏன் பிறந்தார்?

     நான் வெளியூர் சென்றிருந்த சமயம் திருச்சி பேருந்து நிலையத்தில் இரு மாணவர்கள் பேசிகொண்டிருந்த விஷயம் மிகவும் சுவாரிசயமாக இருந்தது.  அதை இன்று உங்களுடன் பகிர்ந்து  கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
     அந்த இருவரிலே ஒருவன் பெயர் ராஜா மற்றொருவன் பெயர் சதீஷ்.  ராஜா கூறினான் "சாமி இருப்பது உண்மையாட?"  அதற்க்கு சதீஷ் இல்லடா அதெல்லாம் சுத்த பொய்.  பொய்யுன்னு நீ எப்படி சொல்ற?  இந்து சாமி இருந்ததுக்கு பகவத்கீதை ராமாயணம் எல்லாம் இருக்கு, கிறிஸ்டீன் சாமி இருந்ததுக்கு பைபிள் ஆதாரமா இருக்கு. நீ மட்டும் எப்படி சாமி இல்லன்னு சொல்ற என்று  சதீஷை பதில் கேள்வி கேட்டான். சாமின்னு ஒன்னு இருந்துருந்தா புதுசு புதுசா இவ்ளவு நோய்கள் பரவரத தடுக்கனுமே! சுனாமி வந்தப்ப அதை தடுத்து இருக்கலாம்ல? இதுமாதிரி பல விஷயம் இருக்கு ராஜா அதனாலதான் நான் அப்படி சொன்னேன் என்றான் சதீஷ்.
     உடனே ராஜா அப்படின்னா இல்லாத கடவுளையா இவ்ளவு பேர் கும்பிடுறாங்க? என்றதும் சதீஷ் சொல்கிறான் "ராஜா அந்த காலத்துல இப்ப இருக்கிறது மாதிரி போலீஸ் இல்ல.  இப்ப நாம ஒருத்தன கொல்லணும்னு நினைச்சா போலீஸ் புடிச்சிகும்னு நமக்கு பயம் இருக்கு, அந்த காலத்துல பயபடுரத்துக்கு அப்படி எதுவுமே இல்ல. பயம் இல்லாத இடத்துல்ல பல தவறுகள் நடக்கும்.  அதனால நம்ம முன்னோர்கள் நம்மை நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு நீ தவறு செய்தால் அது தண்டிக்கும் என்று கூறிவந்தனர்.  இப்படி அவர்களுக்கு மனதில் தவறு செய்யகூடாது என்று பயம் வரவைக்கவும், மனிதனை பண்பானவனாக மாற்றவும்தான் கடவுள் என்ற ஒன்றை படைத்தனர்.  பிறகு அதற்க்கு ஒரு உருவம் கொடுக்க அதுவே நாளடைவில் பல உருவங்களாக மாற்றி பல தெய்வங்களையும் படைத்துவிட்டனர் நமது மக்கள்.  என்ன ராஜா புரிஞ்சிச்சா கடவுள் ஏன் பிறந்தார்னு? என்று கேட்டான்.
     நீ சொல்றத என்னால ஏத்துக்க முடியாது.  கடவுள் நம்பிக்கை என்பது பல ஆயுரம் வருடங்களாக இருக்கின்றது.  இயேசு, புத்தர், நபிகள் நாயகம் ஆஹியோர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருக்கின்றது.  என்று ராஜா சொல்லி முடிக்க சதீஷ்  "அது உன்னூட நம்பிக்கையாய் இருக்கலாம் எனக்கு தெரிந்து நான் சொன்னதுதான் சரி" என்று சொல்லி முடிப்பதற்குள் பேருந்து வந்துவிடவே இருவரும் பேருந்தில் ஏறிவிட்டனர்.
     அவர்கள் இருவரும் பேசியதை கேட்டதிலிருந்தே என் மனதுக்குள் ஒரு சஞ்சலம் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கின்றது.  ராஜா பேசியது சரியா இல்லை, சதீஷ் பேசியது சரியா என்ற சிந்தனை அவ்வப்போது எழுந்துவிடுகின்றது. 
     நான் குழம்பியது போல நீங்களும் குழம்பட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இதை எழுதுகின்றேன்.  யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!    -அன்பு   

No comments:

Post a Comment