Friday, December 3, 2010

சர்வதேச விருது பட்டியலில் சச்சின்





 2011-ம் ஆண்டின் லாரஸ் சர்வதேச விளையாட்டு வீரர் விருதுக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், பார்முலா ஒன் கார் பந்தய வீரர் செபஸ்தியான் வெட்டேல் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
÷இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் இந்தப் பட்டியிலில் இடம்பெற்றுள்ளார்.
÷கால்பந்து நட்சத்திர வீரர்கள் டீகோ போர்லான், ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா, லயோனல் மெஸ்ஸி ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் டெண்டுல்கருக்கு அதிக ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
÷இதில் சிறந்த வீரரை லாரஸ் மீடியா தேர்வுக்குழு தேர்வு செய்யும். சிறந்த வீரர் யார் என்பது ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.
÷இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதமடித்து, ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதமடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
÷டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய முதல்வீரர் என்ற சாதனைப் படைத்துள்ள சச்சின், 49 சதங்களையும் விளாசியுள்ளார். மேலும் ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் அவர் வென்றுள்ளார்.இதேபோல் முத்தையா முரளிதரன், கடந்த ஜூலை மாதம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.(dinamani)

No comments:

Post a Comment