Saturday, December 4, 2010

அரங்கமே காலி : ராமதாஸ் அதிருப்தி



இடைப்பாடியில் நடந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாமில், மேடைக்கு ராமதாஸ் வந்தபோது, பாதிக்கும் மேற்பட்ட சேர்கள் காலியாக இருந்தன. ஆங்காங்கே பலர் நின்று கொண்டு இருந்தனர்.

இதைப் பார்த்து அப்செட்டான ராமதாஸ்
, "மேடையில் உட்கார்ந்து இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் மேடையிலிருந்து இறங்க வேண்டும். காலியாக உள்ள சேர்களில் மக்கள் வந்து உட்கார்ந்த பின் தான் மேடைக்கு வரவேண்டும்' என, கோபத்தோடு கூறினார்.ராமதாஸ், ஜி.கே.மணியை தவிர அனைவரும் மேடை விட்டு இறங்கினர். பின்னர் அன்புமணி வந்த பின் தான் கட்சி நிர்வாகிகள் மேடைக்கு வந்தனர்.இடைப்பாடி தொகுதியில் இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடந்தது.

பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியதாவது:இது மற்ற கட்சிகள் நடத்துவது போல் இது மாநாடோ, கூட்டமோ இல்லை. இளைஞர்களுக்கான பயிற்சி முகாம். தமிழகத்தில் சமீபத்தில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதில் குடிசைகளில் அதிகமாக வசிப்பவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் என ஒடுக்கப்பட்ட நிலையில் வாழுபவர்கள் வன்னியர்கள், என சர்வேயில் கூறப்பட்டு உள்ளது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் பா.ம.க.,வுக்கு ஓட்டுபோட்டால் மட்டுமே வளமான தமிழகம், வன்னியர் ஒருவர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

ராமதாஸ் பேசியதாவது:தமிழகத்தில் 1996ம் ஆண்டு பா.ம.க., தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற இடைப்பாடி, ஆண்டிமடம், தாரமங்கலம், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் இடைப்பாடி தொகுதி முதன்மையானது. இந்த தொகுதியில் உள்ள வன்னியர்களிடம் இருந்த ஒற்றுமை மற்ற தொகுதிகளில் இல்லை. தமிழகத்தில் மொத்தம் ஆறரை கோடி மக்கள் உள்ளனர். அதில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். நீங்கள் அனைவரும் பா.ம.க.,வுக்கு ஓட்டு போட்டாலேயே நாம் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.


குரு சவால் : ஜன. 3ல் நடக்கும் வன்னியர் சங்க மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திண்டுக்கலில் நடந்தது.

மாநில தலைவர் குரு பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தோன்றுவதற்கு முன் 1881ல் வன்னியர் சங்கம் தோன்றியது. தமிழகத்தில் 2.5 கோடி வன்னியர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் ஒரு கோடி பேர் உள்ளனர். எனவே ஜாதி வாரியாக கணக்கெடுக்க கூறுகிறோம். ஜாதி எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு தரக் கூறுகிறோம். ஆயிரம் பேர் மட்டுமே உள்ள குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த மத்திய அமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.2006 சட்டசபை, 2009 லோக்சபா தேர்தலில் நாம் யாருடன் கூட்டணி வைத்திருந்தோமே அவர்கள் நமது முதுகில் குத்தினர். இதனால் தோற்றோம். வரும் தேர்தலில் இவர்கள் நமது முதுகில் குத்தினால், நாம் அவர்கள் நெஞ்சில் குத்துவோம். இது வரை தமிழகத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும், குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஜாதியை சேர்ந்தவர்களே முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். தெலுங்கு பேசும் விஜயகாந்தும் ஆசை படுகிறார்.வரும் 2011 தேர்தலில் எந்த கூட்டணியில் இருந்தாலும் பா.ம.க., ஆதரவு இல்லாமல் யாரும் முதல்வர் பதவி அடைய முடியாது.இவ்வாறு குரு பேசினார்.
(dinamalar)

No comments:

Post a Comment