நயன்தாராவை பிரிந்த பிரபுதேவா தனது குழந்தைகளுடன் மீண்டும் பாசமழை பொழியத் தொடங்கினார். சமீபத்தில் தனது மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அந்த படங்களை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார். மேலும் பிரிந்து வாழும் மனைவி ரமலத்துடன் அவர் இணைந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தி படம் இயக்கி வரும் பிரபு தேவா தான் தங்குவதற்காக மும்பையில் சொந்தமாக வீடு வாங்கினார். சென்னை வரும்போது மனைவி மற்றும் குழந்தைகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனிமேல் சந்தோஷமாக வாழ்வோம் என்று பிரபு தேவாவும் அவரது மனைவியும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
Source:http://cinema.dinakaran.com/cinema/KollywoodDetail.aspx?id=7242&id1=3
No comments:
Post a Comment