Wednesday, September 5, 2012

சில்க் ஸ்மிதாவாக நடிப்பது பெருமை


சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை பெருமையாக உணர்கிறேன். காரணம் அவர் வெறும் கவர்ச்சி நடிகை இல்லை என்று கூறியுள்ளார் நடிகை சனா கான்.
15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘த டர்டி பிக்சர்ஸ்‘ என்ற பெயரில் இந்தியில் படமானது. சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது.
இதையடுத்து மலையாளத்திலும் சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குகின்றனர். ஆனால் இது டர்ட்டி பிக்சர் ரீமேக் அல்ல. சில்கை அறிமுகப்படுத்திய இயக்குநர் தயாரிக்கும் படம் இது.
இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான்நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சில்க் ஸ்மிதா மிகச் சிறந்த நடிகை. அவரை வெறும் கவர்ச்சி நடிகையாக மட்டும் பார்க்ககூடாது.
சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். சில்க் பற்றிய கதை என்பதால் கவர்ச்சியை எதிர்ப்பார்த்துவிட வேண்டாம். இதில் கவர்ச்சி இல்லை. அதைத் தாண்டி நல்ல கதை இருக்கிறது," என்றார்.

No comments:

Post a Comment