திரையில் நகைச்சுவையால் அதிர வைத்த வடிவேலு நீண்ட நாட்களாக கோலிவுட்டை விட்டு ஒதுங்கி இருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் மறுபடியும் ஒரு காதல் என்ற திரைப்படம் வெளியானது. அதன் பிறகு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்கலாம்னு கூறப்பட்டதோடு சரி முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என வடிவேலு, தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது வாஸ்து பிரச்னையாக இருக்கலாம் என கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தன்னுடைய இருப்பிடத்தை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் வீட்டருகே புதிய வீடு கட்டி வரும் வடிவேலு விரைவில் அதில் குடிபெயரலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 2012ல் வடிவேலு நடிப்பில் வெளியான ஒரே படம் என்வென்றால் அது மறுபடியும் ஒரு காதல் என்ற திரைப்படம் மட்டுமே என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
source
source
No comments:
Post a Comment