Sunday, October 14, 2012

அசத்திய அனன்யா..


திருமண விவகாரத்தில் பெரும் சரிவைச் சந்தித்தாலும் கூட விளையாட்டில் பின்னி எடுத்து விட்டார் நடிகை அனன்யா. மலையாள நடிகையான அனன்யா, கேரள மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தமிழில் நாடோடிகள் படம் மூலம் நடிக்க வந்தவர் அனன்யா. இவர் வில்வித்தைப் போட்டியிலும் கை தேர்ந்தவர். சமீபத்தில் தனது திருமண சர்ச்சையால் பெரும் சரிவைச் சந்தித்தார் அனன்யா. இருப்பினும் தற்போது வில்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கொச்சியில் நடந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் கலந்து கொண்ட அனன்யா, முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இவர் ஏற்கனவே பிளஸ் ஒன், மற்றும் பிளஸ் டூ படித்தபோதே சாம்பியன் பட்டம் வென்றவராம். 9ம் வகுப்பு படித்தபோதே வில்லை கையில் தூக்கி விட்டாராம்.
அடுத்து சென்னையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியிலும் அனன்யா கலந்து கொள்ளப் போகிறாராம்.

No comments:

Post a Comment