துப்பாக்கித் திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அனைவருமே, அந்த படத்தின் வெளியீடுக்காக காத்திருக்கிறார்கள்.
துப்பாக்கிப் படத் தலைப்பு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது சுமூகமாக முடிந்திருப்பதால் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஆடியோ வெளியீடும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
துப்பாக்கிப் படம் குறித்துபடத்தின் கதாநாயகன் விஜய் கூறுகையில், இதுவரை வேறு எந்த படத்திலும் நடித்திராக கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது எனது கனவுப் படம் என்றே கூற வேண்டும். ஏ.ஆர்.முருகதாஸின் அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்னேன். சிறப்பாக கதை சொல்லக் கூடியவர். படத்தைப் பார்க்கும் போது உங்கள் கவனத்தை வேறு எங்கும் திருப்ப முடியாத அளவுக்கு படத்தை எடுத்திருப்பார் என்று கூறினார்.
மேலும், சந்தோஷ் சிவன், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது என்றார்.
No comments:
Post a Comment