நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.
பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.
எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம்.
அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.
"என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால்.
விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.
No comments:
Post a Comment