ரஜினிகாந்தின் வழி தனி வழி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் அவர் ஸ்டைலில்.
ரஜினிகாந்தின் நல்ல நண்பரும், முன்னாள் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகள் லஷ்மி மஞ்சு தற்போது மறந்தேன் மன்னித்தேன் படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த படத்துக்கான் ரிக்கார்டிங் சென்னையில் நடைபெற்றது. இந்த ரிக்கார்டிங்கில் இளையராஜா பங்கேற்பதாகவும், ரிக்கார்டிங்கை பார்க்க மோகன் பாபு வந்துள்ளதாகவும் ரஜினிகாந்துக்கு செய்தி போனது.
உடனடியாக தனது காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் முன்னறிவிப்பு கொடுக்காமல் கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த்.
ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்தை பார்த்த உடன் மோகன் பாபு உள்ளிட்டோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு தனது நண்பர் மோகன் பாபுவுடனும், இளையராஜாவுடனும் அலவளாவி திரும்பினார் ரஜினிகாந்த்.
No comments:
Post a Comment