Sunday, October 14, 2012

கரூர் மாவட்டம் ஒரு பார்வை


கரூர் மாவட்டம் [Karur District], காவிரி மற்றும் அமரவதி நதி அண்டையில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் மற்றும் முக்கிய நகரம் கரூர். 2001-ஆம் ஆண்டு மக்கள் கணக்கேடுப்பின்படி [Census] 9,35,686 பேர் உள்ளதாகவும், இதில் 33.27% பேர் நகர்புறவாசிகள். இங்கு 81.74% படித்தவர்கள். இம்மாவட்டம் ஜவுளி மற்றும் பேருந்து [Bus body buildings] பாகங்கள் பூட்டுவதில் மிகவும் பெயர் பெற்ற மாவட்டமாகும்.

கரூர் மாவட்டம் [Karur District], தமிழகத்தின் மையத்தில் அமைந்துள்ளது. வடக்கில் நாமக்கல் மாவட்டமும் தெற்கில்திண்டுக்கல் மாவட்டமும் கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் மேற்கில் ஈரோடு மாவட்டமும் உள்ளது. இம்மாவட்டம் தமிழகத்தின் தலைநகர் ஆகிய சென்னையில் இருந்து 371 கி.மீ. தொலைவில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் [Karur District] 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 158 கிராம ஊராட்சிகள் மற்றும் 203 வருவாய்க் கிராமங்களும் உண்டு.
கரூர் மாவட்டத்தின் [Karur District], 8 துனை வட்டங்கள் :
  • Aravakurichi - அரவக்குறிச்சி
  • K.Paramathy - கே. பரமத்தி
  • Kadavur - கடவூர்
  • Karur - கரூர்
  • Krishnarayapuram - கிருஷ்னராயபுரம்
  • Kulithalai - குளித்தலை
  • Thanthoni - தாந்தோணி
  • Thogaimalai - தோகைமலை

கரூர் மாவட்டம் [Karur District], 5 வட்டங்களாக (தாலுக்கா) பிரிக்கப்பட்டுளது. அவையாவன :

* Aravakurichi Taluk    - அரவக்குறிச்சி வட்டம்
* Kadavur Taluk         - கடவூர் வட்டம்
* Karur Taluk             - கரூர் வட்டம்
* Krishnarayapuram Taluk  - கிருஷ்னராயபுரம் வட்டம்
* Kulithalai Taluk        - குளித்தலை வட்டம்

சாலை வசதிகள்:

கரூர் வழியாக 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
  1. தேசிய நெடுஞ்சாலை 7 [NH-7 (North South Corridor (Kashmir to Kanyakumari)) Varanasi - Kanyakumari] காஷ்மீர் - கன்னியாகுமரி & வாராணசி - கன்னியாகுமரிமற்றும்
  2. தேசிய நெடுஞ்சாலை 67 [NH-67 (Nagapattinam - Trichy - Karur - Coimbatore)] நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி - கரூர் - கோயம்புத்தூர்

தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான
* Erode - ஈரோடு
* Tiruppur - திருப்பூர்
* Pollachi - பொள்ளாச்சி
* Namakkal - நாமக்கல்
* Dindigul - திண்டுக்கல்
* Theni - தேனி
* Palani - பழநி
* Karaikudi - காரைக்குடி
* Kumbakonam - கும்பகோணம்
* Pondicherry etc.,.

ஆகியவற்றுடன் நேரடியாக இனைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment