Sunday, October 14, 2012

தனுஷை கிண்டல் செய்யவில்லை

நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிக்கும் படம், ‘வாலு’. இதில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். மற்றும் சந்தானம், கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘தினம்தோறும்‘ நாகராஜ் உதவியாளர் விஜய் சந்தர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதில் சென்னை இளைஞனாக சிம்பு நடிக்கிறார். எப்போதும் துறு துறுவென்று இருக்கும் கேரக்டர். இதே கேரக்டர் கொண்ட ஹீரோயின். இருவருக்குமிடையே நடிக்கும் கதைதான் படம். இதன் திரைக்கதை பரபரப்பாக இருக்கும். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறோம். ஒரு நிமிடம் ஓடும் படத்துக்கான டீஸரை ரெடி பண்ணிவிட்டோம். தமன் இசை அமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார்'. என்று கூறினார்.

தனுஷை கிண்டல் செய்யவில்லை

படிக்காதவன் படத்தில், 'என்ன மாதரி பசங்கல பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்' என்று தனுஷ் வசனம் பேசியிருப்பார். வாலு படத்தின் டீஸரில், இந்த வசனத்தை, வேறு விதமாக காட்டியிருப்பார்கள். டீஸரில், சிம்புவை பார்த்து ஹன்சிகா. 'ஒரு சில பசங்கல பார்க்க பார்க்க தான் பிடிக்கும், ஆன உன் மாதரி பசங்கல பார்த்தலே பிடிக்கும்' என்று கூறியிருப்பார். இதனால் சிம்பு படத்தில் தனுஷை கிண்டல் செய்ததாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வந்தது. இதனையை இயக்குனர் விஜய் சந்தர் மறுத்துள்ளார், 'டீஸரில் வந்தது சின்ன காட்சி தான், அதனால் தனுஷை கிண்டல் செய்வது போல் இருக்கும், ஆனால் யாரையும் கிண்டல் செய்யவில்லை படம் வெளியான பிறகு அது தெரிய வரும்' என்று கூறினார்.

source

No comments:

Post a Comment