கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களு் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குமுறல் வெளியிட்டுள்ளனர். திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Read more at:
Read more at:
No comments:
Post a Comment