டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தி்ல நடிகர் கமல்ஹாசன்- நடிகை த்ரிஷா ஜோடி நடிப்பில் உருவாகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழாடை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி அமையவிருக்கிறது. சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20ம்தேதி நடைபெறுக்கும் இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் கமல்ஹாசன், நாயகி த்ரிஷா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பளார் உதயநிதி மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்கிருந்து 500 ரசிகர்களை சொகுசு கப்பலில் அழைத்து செல்லவும் மன்மதன் அம்பு டீம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது கூடுதல் தகவல்
No comments:
Post a Comment