கூடைப்பந்து ஆடிக் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உதட்டில் பலமான காயமடைந்தார். காயத்தைக் குணமாக்க அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.
அதிபர் ஒபாமா கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடையவர். இன்று காலை
தனது நண்பர்களுடன் கூடைப்பந்து ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தைப் பறிப்பதில் நடந்த போட்டியில், எதிரணியைச் சேர்ந்தவரின் முழங்கை எதிர்பாராதவிதமாக ஒபாமாவின் உதட்டைத் தாக்கியது. இதில் ஒபாமாவின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து வெள்ளை மாளிகை டாக்டர்கள் விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மயக்க மருந்து கொடுத்து அவரது உதட்டில் 12 தையல்கள் போடப்பட்டன. இந்தக் காயத்தால் அவரது முகத்தில் நிரந்தரமான தழும்பு ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.(DINAMANI)

No comments:
Post a Comment