Wednesday, December 1, 2010

இந்தியாவின் ஏழை முதல்வர் யார்? - (புள்ளிவிபரத்துடன்)

தமிழக முதல்வர் கலைஞர் நேற்று தனது சொத்து கணக்கை வெளியிட்டார்.  நேற்று இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் கூறி இருப்பதாவது.

அவரது குடும்ப நிறுவனமான சன் டிவி பிரிந்தபோது அவருக்கு நூறு கோடி ரூபாய் கிடைத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சன் டிவி துவங்க எவ்வளவு செலவு ஆனது அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி எந்த விளக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை என்பது தமிழக மக்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
அந்த நூறு கோடியை வருமானவரி போக வாரிசுகளுக்கு பிரித்து கொடுத்தது போக மீதி தனக்கு பத்து கோடி ரூபாய் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
உளியின் ஓசை படத்துக்கு கதை வசனம் எழுதியதற்காக அவருக்கு இருபத்தைந்து லட்சம் சம்பளமாக பெற்றதாக கூறியுள்ளார்.  அந்த படம் எதனை நாட்கள் ஓடியது என்பது தமிழர்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
இதற்க்கு பிறகு பெண் சிங்கம் படத்துக்கு கதை வசனம் எழுதியதற்காக 50 லட்சம் கிடைத்ததாக கூறியுள்ளார்.  ஆக தமிழ்நாட்டில் இவர் எழுதும் ஓடாத திரை பட கதைக்காக இன்றுவரை அதிக சம்பளம் வாங்கும் ஒரே எழுத்தாளர் இவர் தான் என்பதும் தமிழக மக்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
இறுதியாக தன்னிடம் ௦6,01,82,220 என்ற மிக குறைந்த தொகை மட்டுமே தனது கணக்கில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  இவை எல்லாம் தான் உழைத்து சம்பாதிததாகவும் கூறியுள்ளார்.
இவர் இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவர் என்று பேசப்பட்டுவரும் இந்த வேலையில் உலகத்திலேயே தான்தான் ஏழ்மையான முதலமைச்சர் என்று அவர் கூறியுள்ளார்.
இதுவரை அவர் கூரியதைகூட உண்மையென்று ஒருபக்கம் வைத்துகொண்டாலும் இவர் முதலில் ஆரம்பித்த சன் டிவி பற்றிய விவரங்களும், இப்போது ஆரம்பித்திருக்கும் கலைஞர் டிவி, இசைஅருவி, சித்திரம் டிவி, கலைஞர் செய்திகள் போன்ற தொலைக்காட்சிகள் எல்லாம் ஆரம்பிக்க எப்படி பணம் வந்தது அதிலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது அது யாருக்குபோய் சேருகிறது என்பதை பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.  அப்படி என்றால் இந்த தொலைகாட்சிகள் எல்லாம் யாருடையது?.
குறைந்த பட்சம் ஒரு தொலைக்காட்சி தொடங்குவதர்க்கே 500 கோடி செலவாகும் என்று கூறப்படும்போது 4 தொலைகாட்சிகள் தொடங்க எங்கிருந்து பணம் வந்தது என்பது குறிபிடப்படவில்லை.
இந்த கணக்கை கண்ணுடையோர்  காண்பதற்காக! முகத்தில்  இரண்டு புண்ணுடையோர்க்கு அல்ல! என்று பஞ்ச் வசனம் கூறியுள்ளார் முதலமைச்சர்  கருணாநிதி.   அவர் அறிக்கையில் விட்டுப்போன மேற்கண்ட தகவல்களை கேட்போர் புண்ணுடையவர்கலாம்.  அதை அப்படியே நம்புபவர்கள் கண்ணுடையவர்களாம்.  இவர் தமிழ்நாட்டின் கண்ணா? அல்லது புண்ணா? என்பதை விரைவில் மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது திண்ணம்.
                                                                                                             -அன்பு.நெட்

No comments:

Post a Comment