Wednesday, November 24, 2010

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


     ஆ.தி.மு.க-தே.மு.தி.க உறவு நிலை குறித்து நேற்று விஜயகாந்த் தலைமையில் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் பேசுபவை  வெளியே தெரியாமல் படு ரகசியமாக இருக்கும் பொருட்டு கூட்டம் நடந்த கட்டிடத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன.  இறுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜயகாந்த்
கூட்டத்தில் பிசியவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.  எனினும் போக்குவரத்து தொழிச்சங்க தேர்தலில் தே.மு.தி.க ஆ.தி.மு.க விற்கு ஆதரவளிப்பது பற்றி நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 
     விரைவில் நடைபெற இருக்கும் சேலம் மாநாட்டிற்காக மாநில மாவட்ட நிர்வாகிகளும் கட்சியின் தொண்டர்களும் கடுமையாக உழைக்கவேண்டும்.  அ.தி.மு.க நடத்திய மாநாடுகளில் எல்லாம் ஆண்கள் கூட்டமே அதிகமாக கலந்துகொண்டது.  நமது மாநாட்டில் பெண்களும் அதிக அளவில் கலந்துகொள்ளும் விதமாக நிர்வாகிகள் ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் என்றும் மேலும் சேலம் மாநாடுதான் தே.மு.தி.க வின் திருப்புமுனையாக அமையும் என்றும் அதிலே முக்கிய அறிவிப்புகளை தெரிவிப்பேன் அதுவே கட்சியின் திருப்புமுனையாக அமையும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.  
     எது எப்படியோ தே.மு.தி.க அ.தி.மு.க கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.  போக்குவரத்து தொழிச்சங்கங்களுக்கு நடந்த தேர்தலே இதற்க்கு அச்சாணியாக அமைந்துவிட்டது.  கடந்த தேர்தலிலேயே அ.தி.மு.க எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு இருந்தது.  ஆனால் தே.மு.தி.க கணிசமான அளவில் அதன் ஓட்டுகளை பிரிதுவிட்டதால் அது தோல்வியடைந்தது.  இம்முறையும் அதே தவறு நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள விரும்புகிறது அ.தி.மு.க.  தி.மு.க வை எப்படியாவது ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டி கொண்டு உழைக்கும் விஜயகாந்துக்கும் இம்முறை தி.மு.க வை வரவிடாமல் ஒழிக்க இந்த கூட்டணி ஒன்றே ஆயுதம் என்பதை அறிந்திருக்கிறார் எனவே கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கும் நிலையில் உள்ளார்.  
      தே.மு.தி.க வும் அ.தி.மு.க வும் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அது மிகவும் பலமான கூட்டணியாக அமையும் என்பது திண்ணம்.  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.  

No comments:

Post a Comment