தேர்தல் பரபரப்புகளுக்கு முன்னே "விருதகிரி' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் விஜயகாந்த். கதை, திரைக்கதை எழுதி முதன் முறையாக விஜயகாந்த் இயக்கி, நடிக்கும் படம் "விருதகிரி'. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் மாதுரி என்ற மும்பை மாடல் விஜயகாந்தின் ஜோடியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மலேசியா, பாங்காக், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலே படமாக்கப்பட்டுள்ளது. இறுதி காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. "" விஜயகாந்த் படத்துக்கான அனைத்து பார்முலாக்களும் இதில் இருக்கும். 80 சதவீதம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரபரப்புகளுக்கு முன்னே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதனால் டிசம்பர் மாத இறுதியில் படம் ரிலீசாகிறது'' என்றார் தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ்.
(dinamani)
No comments:
Post a Comment