Wednesday, October 10, 2012

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரு பார்வை


நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District], தமிழகத்தின் கடலோர தென்மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் நாகப்பட்டினம் [Nagapattinam] ஆகும். நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District], இதற்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தது. 15 அக்டோபர் 1991-ஆம் ஆண்டு, தனி மாவட்டமாக உருவக்கப்பட்டது. இம்மாவட்டம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டத்துடன் தனது எல்லைகளை பகிர்ந்துள்ளது. 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் [Nagapattinam District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 14,88,839 பேர் உள்ளதாகவும், இதில் 22.18% பேர் நகர்புறவாசிகள். இங்கு 76.89% பேர் படித்தவர்கள், இது மாநிலத்தின் சராசரி அளவாகும்.

நாகப்பட்டினம் மாவட்டம் [Nagapattinam District] 8 தாலூக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

* Kilvelur - கீழ்வேலூர்
* Kutthalam - குத்தாலம்
* Mayiladuthurai - மயிலாடுதுறை
* Nagapattinam - நாகப்பட்டினம்
* Sirkazhi - சீர்காழி
* Tharangambadi - தரங்கம்பாடி
* Thirukkuvalai - திருக்குவளை
* Vedaranyam - வேதாரண்யம்

இதில், மயிலாடுதுறை [Mayiladuthurai] மற்றும் திருக்குவளை [Thirukkuvalai] தவிர, மற்ற அனைத்து 6 தாலூக்காகளும் கடலோர தாலூக்காக்களாகும். இம்மாவட்டம், வங்காளவிரிகுடாவின் [Bay of Bengal] கிழக்கு கரையை தனது எல்லையாக கொண்டுள்ளது. தரங்கம்பாடிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே சிறிய மாவட்டமாகிய காரைக்கால் உள்ளது, காரைக்கால் மாவட்டம், யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரின் [Pondicherry/Puducherry] ஆட்சிக்கு உட்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் [Nagapattinam District], மிகவும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் [Velankanni Church] உள்ளது.

1 comment: