நமீதாவின் மிட்நைட் பார்ட்டி!
தமிழக ரசிக பெருங்குடி மக்களை மச்சான்ஸ் என்று ஆசை ஆசையாக அழைப்பவர் நமீதா. ஆனால் என்ன காரணமோ ரசிகர்களின் மனதில் இன்னமும் நிறைந்திருக்கும் நமீதாவுக்கு சினிமாக்காரர்களின் மனதில்தான் இடமில்லை. தினம் தினம் இயக்குனர் மற்றும் படாதிபதிகளை துரத்தி சான்ஸ் கேட்டு வருவதை இன்றுவரை அவர் விட்டபாடில்லை. தற்போது அரிராஜனின் இளமை ஊஞ்சல் படத்தில் நடித்து வருபவர், இந்த படம் திரைக்கு வரும் நேரத்தில் மேலும் சில படங்களை எப்படியேனும் பிடித்து விட வேண்டும் என்பதற்காக சில குறுக்கு வழிகளில் இறங்கியிருக்கிறார்.அதன்முதல்கட்டமாக, கடந்த வாரத்தில், சென்னையிலுள்ள பிரதான ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சில சினிமா நபர்களை வரவைத்து விடிய விடிய மதுபான பார்ட்டி வைத்திருக்கிறார் நமீதா. இந்த சம்பவம் கோலிவுட்டில் காதும் காதும் வைத்த மாதிரி பரவி வருவதையடுத்து, நமீதாவின் பெயரை சொன்னாலே ஜொள் ஊறும் சில நரைமுடி சினிமா பிரபலங்களும் அம்மணியின் அழைப்புக்காக சீக்ரெட்டாக தொடர்பு கொண்டு வருகிறார்களாம். குஜராத் குதிரையின் இந்த படவேட்டையில் யார் யாரெல்லாம் பலியாகப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
source
No comments:
Post a Comment