Thursday, October 4, 2012

பெரம்பலூர் மாவட்டம் ஒரு பார்வை


பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], இந்தியாவின் தமிழக மாவட்டம் ஆகும். இதன் தலைமையகம் பெரம்பலூர். இம்மாவட்டம் சுமார் 1,752 சதுர.கி.மீ. பரவியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 4,93,646 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 66.1% பேர் படித்தவர்கள், ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 5,64,511 பேர் உள்ளதாகவும், இதில் 2,81,436 ஆண்களும் 2,83,075 பெண்கள் உள்ளனர். இங்கு 74.7% பேர் படித்தவர்கள்,

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 1995-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி, திருச்சிராபள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் வடக்கில் கடலூர் மாவட்டம் [Cuddalore District], தெற்கில் திருச்சிராபள்ளி மாவட்டம் [Tiruchirappalli District], கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டம் [Thanjavur District], மேற்க்கில் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்சிராபள்ளி மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], சாகுபடிக்கு காவிரி ஆறு மிகவும் இன்றியமையாதது ஆகும். இங்கு, முக்கிய பயிர்களான நெல், கடலை, கரும்பு, கம்பு மற்றும் முந்தரி அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. தற்போது, தமிழக தேவையில், 27% சோளத்தையும் 50% சின்ன வெங்காயத்தையும் பெரம்பலூர் மாவட்டம்[Perambalur District] உற்பத்தி செய்கிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் [Perambalur District], இலங்கை அகதிகள் முகாம் துறைமங்களத்தில் உள்ளது. இம்முகாமில் 70 குடும்பமும் மொத்தம் 280 பேரும் இங்கு தங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனையும் ஒன்று பெரம்பலூரிலும், தாலூக்கா மருத்துவமனைகள் வேப்பந்தட்டை ஒன்று, மற்றோன்று கிருஷ்னபுரத்திலும் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], 3 வட்டங்களாக [தாலுக்கா] பிரிக்கப்பட்டுள்ளது.
  • Kunnam Taluk - குன்னம் வட்டம்
  • Perambalur Taluk - பெரம்பலூர் வட்டம்
  • Veppanthattai Taluk - வேப்பந்தட்டை வட்டம்

பெரம்பலூர் மாவட்டம் [Perambalur District], சிறப்பு பொருளாதார மண்டலத்தை 5000 ஏக்கர் பரப்பளவில் [சுமார் 20 சதுர.கி.மீ] உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சமாக் அனைத்து உயர் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதாக அமையும். இதற்கு SREI Infrastructure Finance Ltd, தமிழ்நாடு தெழில் முன்னேறாக் கழகத்துடன் [TIDCO] இனைந்து இதை உருவாக்கவுள்ளது. இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னை துறைமுகம், இரயில் நிலையம் மற்றும் திருச்சிராபள்ளி சர்வதேச விமான நிலையத்துடனும் இனைக்கப்படும். இப்போதெ, தேசியமையமாக்கப்பட்ட முன்னனி வங்கிகளாகிய,

* Axis Bank
* Bank of Baroda
* Canara Bank
* HDFC Bank
* ICICI Bank
* IOB [Indian Overseas Bank]
* SBI [State bank of India]
தங்களது கிளைகளை பெரம்பலூரி ஆரம்பித்துள்ளது.

1 comment: