அடுத்து சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதற்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகுமார்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரண்டி நடிகர் கம் இயக்குநராக உள்ளார்.
ஹீரோ என்று பார்த்தாலும், முன்னணி நாயகர்களுக்கு இணையாக வந்துவிட்டார். சுந்தரபாண்டியன் அவரை ஒரு படி மேலே உயர்த்திவிட்டது.
இந்த நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சூர்யாவுக்காக சசிகுமார் கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யாகூறுகையில், "சசிகுமாரும், நானும் சந்தித்துப் பேசியது உண்மைதான்.
கதை பற்றியும் விவாதித்துள்ளோம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பார்க்கலாம்," என்றார்.
அப்படி முடிவானால், சிங்கம் 2 முடிந்தபிறகு இந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்!
No comments:
Post a Comment