கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை சன்னி லியோனுக்கு மும்பையில் யாரும் வீடு தர மறுக்கிறார்களாம்.
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிப் பெண் இந்த சன்னி லியோன். மாடலாக வாழ்க்கையை ஆரம்பித்தவர், பின்னர் ஆபாசப் பட நடிகையாகிவிட்டார்.
இவரது எக்கச்சக்க ஆபாச வீடியோக்கள் இப்போதும் ஆன்லைனில் உள்ளன. இந்த நேரத்தில்தான் ஜிஸ்ம் 2 இந்திப் படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது.
இந்தப் படம் சுமாராக இருந்தாலும், சன்னியின்கவர்ச்சிக்காக நல்ல வசூலைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இனி ஆபாசப்படங்களில் நடிக்காமல், இந்திப் படங்களில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் மும்பையிலேயே குடியேறவும் முடிவு செய்துள்ளார்.
ஆனால் சன்னி லியோனுக்கு வீடு வாடகைக்கு தர பலரும் மறுத்துவிட்டனர்.ஆபாச நடிகைக்கு வீடு தர முடியாது என கூறுகிறார்களாம்.
சரி, வாடகைக்குதானே வீடு தர மறுக்கிறார்கள்? சொந்தமாகவே ஒரு வீட்டை வாங்கிவிடலாம்... உடனே ஏற்பாடு செய்யுங்கள் என புரோக்கர்களிடம் கூறிவிட்டாராம் சன்னி லியோன்!
No comments:
Post a Comment