Tuesday, October 2, 2012

யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்- த்ரிஷா

தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பது செய்தியாக இருந்தபோதும், இதுவரை அது சம்பந்தமான கேள்விகளுக்கு உரிய பதில் எதுவும் அளிக்கவில்லை த்ரிஷா. ஆனால் அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில்,சமீபத்தில் சில சினிமா நண்பர்களே த்ரிஷாவை அணுகி, ராணாவுடன் இணைத்து செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறதே. உங்களுக்கு என்னதான் கதை நடக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ராணா எனது நண்பர் அவ்வளவுதான். மற்றபடி இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது உண்டு. ஆனால் மீடியாக்கள்தான் நாங்கள் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக வதந்தி பரப்பி விட்டு வருகின்றன. ஆனால் அதற்காக நான் எனனை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. இப்போதும் ராணாவை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். இந்த சந்திப்பை எந்த செய்திகளும் எதுவும் செய்துவிட முடியாது. நல்ல நட்பை யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றும் தில்லாக பேசுகிறார் த்ரிஷா.
source

No comments:

Post a Comment