Thursday, November 15, 2012

தமிழக பா.ஜ.,வில் இணைகிறார் நடிகை நமீதா?

பிரபல தமிழ் நடிகை நமீதா, தமிழக பா.ஜ.,வில் சேருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்; அவரை வரவேற்க பா.ஜ., தயாராகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நமீதா, "டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தமிழில் இவரது, "மச்சான் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. 2002ல், தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர், குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர். 1998ல் சூரத் நகரின் அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 2001ல், "மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். இவருக்கு, அரசியலில் திடீர் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. விரைவில், பா.ஜ.,வில் இணையும் விழாவும் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:எங்கள் கட்சியில் சேர விரும்புவதாக தெரிவித்து, பேச்சவார்த்தையை நடிகை நமீதா நடத்தியுள்ளார். எப்போது இணைவார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். பா.ஜ.,வில் நமீதா இணைவதில் தவறு ஒன்றும் இல்லை. எல்லா கட்சியிலும் நடிகை, நடிகர்கள் இருக்கின்றனர்.தமிழக பா.ஜ.,விலும் ஒரு நடிகை இருந்தால் ஆச்சரியமானது அல்ல. அவர் இணைவதை வரவேற்கிறோம். கட்சியின் விதிகளின் படி, அவருக்கான தகுதி அளிக்கப்படும். அதையேற்று, அவர் கட்சி பணிகளில் ஈடுபடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
source

No comments:

Post a Comment