ஷங்கர் என் தம்பி, சிம்பு என் தம்பி... இப்படி இன்னும் நிறைய தம்பிகள் உருவாகி வருகின்றனர் என்றார் பவர் ஸ்டார் எனப்படும் சீனிவாசன். சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராம நாராயணனுடன் இணைந்து தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவருடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் ஷங்கர் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த இசை வெளியீடு, பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களால் பரபரப்பாகிவிட்டது. அவர் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக அரங்கம் அதிர்ந்தது. சீனிவாசன் (அதாங்க பவர் ஸ்டார்) பேசுகையில், அனைவருக்கும் இந்த லட்டு திகட்டாத லட்டாக இருக்கும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம். திரையுலகில் நான் மீண்டும் முத்திரை பதிக்க வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றி. இந்தப் படத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ' படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இது கனவா? நனவா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உண்மையிலேயே நடிக்க வாய்ப்பு கொடுத்தார். ஒரு முறையாவது நான் அவருடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், "அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்" என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறவிப் பலனை அடைந்துவிட்டேன். அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள், என்றார். சந்தானம் தனது பேச்சில் முடிந்தவரை சீனிவாசனை வார, வழக்கம்போல அது சீனிவாசனுக்கே சாதகமாக முடிந்தது.
Read more at:
Read more at:
No comments:
Post a Comment