நட்சத்திர ஓட்டலில் பிரபுதேவாவுடன் விருந்து சாப்பிட்டதன் மூலம் நயன்தாராவை கோபத்துக்குள்ளாக்கிய நடிகை ஹன்சிகா தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி’ என்று தடாலடியாக கூறியுள்ளார். பிரபுதேவா இயக்கும் ‘எங்கேயும் காதல்’ படத்தில் நடிக்கிறார் ஹன்சிகா மோத்வானி. அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டபோது மறுத்துவிட்டார். இந்நிலையில்
ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஹன்சிகாவுக்கு பிரபு தேவா விருந்து கொடுத்தார். அதையறிந்த நயன்தாரா கோபம் அடைந்து பிரபு தேவாவிடம் சண்டைபோட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஹன்சிகா தனது டுவிட்டர் பகுதியில் எழுதியிருப்பதாவது: பிரபுதேவா எனது குரு. எனக்கு அண்ணன் மாதிரி. ‘எங்கேயும் காதல்’ படத்தில் அவருடன் பணியாற்றியபோது நன்றாக ‘என்ஜாய்’ செய்தேன். அவருடன் என்னை இணைத்து பேசுவது அவதூறானது. இது எங்களுடைய இமேஜை குறைக்கும் செயல். இது எங்கேயும் நடக்காது. எனக்கு 19 வயதுதான் ஆகிறது. அவரை (பிரபுதேவா) எப்படி நான் காதலனாக நினைக்க முடியும்? அவரை வழிகாட்டி, சகோதரனாகவே நினைக்கிறேன். அவரிடம் ‘சல்சா’ நடனம் கற்றது பற்றி கேட்கிறார்கள். படத்துக்கு அந்த நடனம் தேவைப்பட்டதால் கற்கச் சொன்னார்.
தொழில் ரீதியாக எனக்கு ‘சல்சா’ கற்றுத் தந்தார். 15 வயதிலிருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். பிரபு தேவாவுடன் என்னை இணைத்து வெளியான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பரப்பியவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் பிரபு தேவாவுடன் சாவகாசமாக பேசுவதற்கு நேரமே கிடைக்கவில்லை. எங்கள் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடக்கும் ஷூட்டிங்கில் இருக்கிறேன். ஐதராபாத்துக்கு சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. நயன்தாராவை ஒரே முறைதான் பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர். பிரபுதேவாவும், அவரும் ஜோடியாக இருப்பது எனக்கு சந்தோஷம். பிரபுதேவாவுடன் இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆசை இருக்கிறது. இப்போது மற்ற படங்களில் நடிப்பதால் வாய்ப்பில்லை. எதிர்காலத்தில் இன்னொரு வாய்ப்பு அவருடன் நடிக்க கிடைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறி உள்ளார்.
நட்சத்திர ஓட்டலில் பிரபு தேவா தனக்கு விருந்து கொடுத்தாரா, இல்லையா என்பது பற்றியோ அல்லது நயன்தாரா - பிரபுதேவா மோதிக் கொண்டது உண்மையா என்பது குறித்தோ டுவிட்டரில் ஹன்சிகா எதுவும் சொல்லவில்லை.
No comments:
Post a Comment