நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
÷முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
÷முதல் ஆட்டத்தை இந்திய அணி வென்றிருந்த நிலையில், இரண்டாவது ஆட்டம் ஜெய்ப்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
÷நியூசிலாந்து தரப்பில் கடந்த ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் வெட்டோரி அணிக்கு திரும்பினர். டேரில் டஃப்பிக்கு பதிலாக டிம் செüதி சேர்க்கப்பட்டார்.
÷டாஸ் வென்ற இந்திய கேப்டன் கம்பீர் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹவ் 5 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் சிறப்பாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய வில்லியம்சன் 29 ரன்கள் எடுத்திருந்தபோது முனாப் படேல் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார்.
÷பின்னர் வந்த டெய்லர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து குப்திலுடன், ஸ்டைரிஸ் ஜோடி சேர்ந்தார். இதனிடையே குப்தில் அரைசதமடித்தார். அணியின் ஸ்கோர் 161 ரன்களை எட்டியபோது குப்தில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸரும், 3 பவுண்டரிகளும் அவரது ஸ்கோரில் அடங்கும்.
÷பின்னர் கேப்டன் வெட்டோரி, ஸ்டைரிஸýடன் ஜோடி சேர்ந்தார். ஸ்டைரிஸ் சிறப்பாக விளையாடி 59 ரன்களிலும், வெட்டோரி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்கள் விரைவாக வெளியேறினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது.
÷இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
÷இதையடுத்து 259 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர், முரளி விஜய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
÷கம்பீர் அதிரடியாக விளையாடி நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 44 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளுடன் அரைசதமடித்தார். அணியின் ஸ்கோர் 87 ரன்களை எட்டியபோது விஜய் 33 ரன்களில் வெட்டோரி பந்துவீச்சில் போல்டு ஆனார்.
÷பின்னர் களமிறங்கிய விராட் கோலி கம்பீருடன் இணைந்து சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். கேப்டன் வெட்டோரி அவ்வப்போது பந்துவீச்சை மாற்றியபோதிலும் கம்பீர்-கோலி ஜோடியை கட்டுப்படுத்த முடியவில்லை.
÷சிறப்பாக விளையாடிய கோலியும் அரைசதமடித்தார். அவர் அரைசதமடித்த சிறிது நேரத்தில் கம்பீர் 89 ரன்களில் 13 பவுண்டரிகளுடன் சதமடித்தார். அணியின் ஸ்கோர் 203 ரன்களை எட்டியபோது கோலி 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்தது. 43 ஓவர்களில் இந்திய அணி இந்த ஸ்கோரை எடுத்தது. கம்பீர் 116 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 138 ரன்களுடனும், யுவராஜ் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
÷இப்போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.(dinamani)

No comments:
Post a Comment