Saturday, September 8, 2012

நாட்டிலேயே முதல்முறை நெட்டில் புதுப் படம் பார்த்த ஆயிரம் பேர் மீது நடவடிக்கை



திருவனந்தபுரம்: இன்டர்நெட்டில் சினிமா பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.சமீப காலமாக, புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்கள் உடனுக்குடன் இன்டர்நெட்டில் வெளியாகின்றன. திருட்டு சிடி வாங்கி பார்ப்பதை விட, இன்டர்நெட்டில் புதிய படத்தை எளிதாக பார்த்து விடுகின்றனர். இதனால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் புகார் கூறி வருகின்றனர். ஆனால், புதிய படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுபவர்கள் யார்? படத்தை பார்ப்பவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.இந்நிலையில், கொச்சியை சேர்ந்த ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம், ‘ஜாது‘ என்ற புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், சினிமாவை இன்டர்நெட்டில் அப்லோடு செய்பவர்களையும், 

இன்டர்நெட்டில் படம் பார்ப்பவர்களையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். கேரளாவில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர் பார்ட்டி‘ என்ற மலையாள படத்தை இன்டர்நெட்டில் அப்லோடு செய்த 16 பேரை, இந்த தொழில்நுட்பத்தின் மூலம் திருவனந்தபுரம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். புனேயை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர், இந்த படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளார். அவருடைய செல்போன் எண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரித்தபோது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று மறுத்தார். பெற்றோரிடம் விசாரித்தபோது, படத்தை அப்லோடு செய்தது மாணவர்தான் என்பது உறுதியானது. இதையடுத்து, மாணவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த 15 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இது தொடர்பான எப்ஐஆர் திருவனந்தபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த படத்தை இன்டர்நெட்டில் பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீதும¢ நடவடிக்கை எடுக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். ‘இன்டர்நெட்டில் படம் பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது, நாட்டிலேயே இதுதான் முதல் முறை.
source

No comments:

Post a Comment