ஒத்த பைசா செலவில்லாமல் 150கிமீ வரை செல்லும் புதிய சோலார் ரிக்ஷாவை திருப்பூரை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
திருப்பூரை சேர்ந்தவர் சிவராஜ் முத்துராமன்(26). எம்பிஏ பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறை மீது அதீத ஆர்வம். தனது ஆர்வத்தை மனதில் போட்டு பூட்டாமல் செயல்வழியில் காட்ட எண்ணிய அவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.
"ஈக்கோ ப்ரீ கேப்"(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் ரிக்ஷாவில் 3 பேர் வரை பயணம் செய்யலாம். மூன்று மணிநேரம் சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை செல்லும் வசதிகொண்ட இந்த புதிய ரிக்ஷா அதிகபட்சம் மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும். சூரிய மின்சக்தி தீர்ந்துவிட்டால் கூட சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.
இதுகுறித்து சிவராஜ் கூறுகையில்," இந்த சோலார் ரிக்ஷாவை தயாரி்க்க மூன்று ஆண்டுகள் ஆனது. முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் எழுந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து தற்போது இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டேன். வணிக ரீதியில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரலாம்.
இந்த ரிக்ஷாவுக்கு பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது. எனது இந்த கண்டுபிடிப்பக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சோலார் ரிக்ஷாவை பெரு நகரங்களில் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன்," என்று தெரிவித்தார்.
கார்பன் புகையால் திணறி வரும் பெரு நகரங்களுக்கு இந்த புதிய சோலார் ரிக்ஷா நிச்சயம் வரப்பிரசமாக இருக்கும் என்று கூறலாம்.
This comment has been removed by the author.
ReplyDeleteஅற்புதமான செய்தி www.tamilbhp.com
ReplyDelete