Tuesday, October 23, 2012

மாலை பொழுதின் மயக்கத்திலே ஹீரோயின் சுபா புத்தல்லா அகால மரணம்

மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன் வாழ்க்கையை துவக்கியவர் சுபா புத்தல்லா. நேற்று இரவு அகால மரணம் அடைந்தார். அவருக்கு வயது 21. கடந்த சில மாதங்களாகவே மூளை நரம்பு பிரச்னையால் (ப்ரைன் ட்யூமர்) பாதிக்கப்பட்ட அவர் பெங்களூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் அகால மரணம் அடைந்தார். அவரது மரணம் கன்னடம், மற்றும் தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பெங்களூரில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்து சேர்ந்த பிறகு உடல் அடக்கம் நடைபெறும் என்று தெரிகிறது.

மறைந்த சுபாவின் தந்தை டாக்டர். ராஜ்பால் புத்தேலா விஞ்ஞானியாக இருக்கிறார். அம்மா சந்தோஷ் ஆசிரியை. ஒரு அக்கா, அவர் திருமணமாகி அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார். ஒரு தம்பி அவர் பெங்களூரிலேயே பொறியியல் படித்து வருகிறார். சுபா 1991ம் ஆண்டு பஞ்சாபில் உள்ள லுதினியா நகரில் பிறந்தார். சிறு வயதிலேயே அழகுடன் திகழ்ந்த அவருக்கு மாடலிங் உலகில் புகழ்பெற வேண்டும் என்பது ஆசை. பெங்களூரில் பள்ளி படிப்பை முடித்ததும் தயானந்தா கல்லூரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் செய்யத் தொடங்கினார். 

2010ம் ஆண்டு நடந்த தென்னிந்திய அழகிப் போட்டியில் சிறந்த கூந்தல் அழகி பட்டம் பெற்றார். அதன் பிறகு நல்லி சில்க்ஸ், ராசி சில்க்ஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரப் படங்களில் நடித்தார். அந்த விளம்பர படங்களால் மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது அழகும், நடிப்பும் பேசப்பட்டது. அடுத்து அவர் இரண்டு கன்னடப் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டது. அவருக்காக மூன்று படங்களும் காத்திருந்தது. ஆனால் காலமும், காலனும் காத்திருக்கவில்லை. சுபா இப்போது நம்முடன் இல்லை.
source

No comments:

Post a Comment