நவம்பர் 7ம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த விஸ்வரூபம் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ளார். இதில் அவருடன் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு ஷங்கர் எக்சான் லாய் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு வருகிற நவம்பர் 7 ஆம் தேதி அதாவது கமலின் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக இருந்தது. இதற்காக மூன்று நகரங்களில் பறந்து பறந்து பாடலை வெளியிடுகிறார் கமல்ஹாசன் என்று செய்திகள் வெளியாகின. இப்பொழுது சில காரணங்களினால் இசை வெளியீட்டு விழா ஓரிரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க பட்டுள்ளது.
முதலாவது இப்படத்தின் இசை வெளியீட்டை சாதாரணமாக வெளியிட்டால் போதும் என்று கூறினார்கள், ஆனால், இப்போது மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டினை செய்ய வேண்டும் என்று அதற்க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழில் ‘விஸ்வரூபம்' என்றும் ஹிந்தியில் ‘விஸ்வரூப்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு தான் இப்படத்திற்கு U / A சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment