பெரும் கடன் சுமை, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வராத நிலை, தரமற்ற கதை போன்றவற்றால், ஸூட்டிங் - போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் முடிந்தும் 70 தமிழ்ப் படங்கள் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன.
இவை இந்த ஆண்டு சென்சார் செய்யப்பட்டவை என்பதால், வரும் டிசம்பர் இறுதிக்குள் எப்படியாவது அனைத்துப் படங்களையும் வெளியிட்டுவிடும் முயற்சியில் உள்ளனர்.
"வருடம் முழுவதும் சும்மா இருந்துவிட்டு வருடக் கடைசியில் குய்யோ முறையோ என்று புலம்புவது தமிழ் சினிமாக்காரர்களுக்குப் புதிதல்ல.
இப்போது வெளியாகாமல் உள்ள 70 படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த 6 மாதங்களுக்கும் முன்பே தயாரானவை. ஆனால் யாரும் வாங்க முன்வராத படங்கள்.
இவற்றை வேறு வழியின்றி இப்போது சொந்தமாகவேனும் வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளர்கள் இதனை முன்பே செய்திருந்தால், இத்தனை நாட்களுக்கான வட்டியையாவது தவிர்த்திருக்கலாமே" என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 10 வாரங்கள் உள்ளன. அதற்குள் இந்த 70 படங்களும் ரிலீசாகவிருக்கின்றன
thanks thatstamil.com
No comments:
Post a Comment