Wednesday, December 1, 2010

மாவட்ட செயலர்களுக்கு விஜயகாந்த், "கல்தா'



தூத்துக்குடி, கடலூர், ஈரோடு மாவட்ட தே.மு.தி.க., செயலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலராக உள்ள கோமதி கணேசன், பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நகர செயலராக உள்ள சண்முகராஜா அப்பதவியில் நியமிக்கப்படுகிறார். ஈரோடு வடக்கு மாவட்டச் செயலர் சந்திரகுமார் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நம்பியூர் ஒன்றியச் செயலர் செந்தில்குமார் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார்.

கடலூர் தெற்கு மாவட்டச் செயலர் உமாநாத் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சசிகுமார் நியமிக்கப்படுகிறார். கோவை தெற்கு மாவட்டம், உடுமலை நகர செயலர் சண்முகம், கேப்டன் மன்ற செயலர் சத்தியமூர்த்தி, நகர துணை செயலர் தாஜுதீன் ஆகியோர், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், பொறுப்புகளில் இருந்து விடுக்கப்படுகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை நகர செயலராக பண்ணை பாலுவும், வடக்கு மாவட்ட மாணவரணி செயலராக முத்து சுப்பிரமணியனும், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயலராக அருண்குமாரும் நியமிக்கப்படுகின்றனர்.(dinamalar)

No comments:

Post a Comment