Thursday, December 2, 2010
இந்திய அணி அறிவிப்பு!
நடந்துவரும் ஒருநாள் போட்டியில் அடுத்துவரும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அணியில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ரைனா மற்றும் ஸ்ரீசாந்த் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்குபதிலாக பிரவீன் குமார் மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாகிர் கான் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாகிர் கான் கடந்த சில நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்ததை அடுத்து அவர் அணியில் இடம்பெற்றுள்ளார். தற்பொழுது அணியில் இடம்பெற்றுள்ள சகா அடுத்துவரும் ஒரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவார் அதற்க்கு அடுத்த போட்டியில் கடந்த ஆறு வருடங்களுக்கு பிறகு பார்த்திவ் பட்டேல் அணியில் இடம்பிடிக்கிறார்.
முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடரை கைப்பற்றியது. கடைசியாக நடந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இந்தியா அபாரமாக வெற்றிபெற்றது. இந்நிலையில் அணியில் மாற்றம்செய்துள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
அன்பு.நெட்
Labels:
cricket news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment